புதுச்சேரியில் நடைபெற்று வரும் 500 க்கும் மேற்பட்ட அதாயி மாணவிகள் கலந்து கொண்டிருக்கும் அதாயி குழுமங்களின் மூன்று நாள் மகளிர் மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில்
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் உயர்கல்வி ஆலோசகர் பேரா.M.முஹம்மது இஸ்மாயில் M.E.,LLB அவர்கள் கலந்து கொண்டு
தமிழக முஸ்லிம்களின் கல்வி நிலை குறித்தும் அந்நிலையை மேம்படுத்த பெண் கல்வியாளர்கள் உருவாக வேண்டியதன் தேவை குறித்தும் உரை நிகழ்த்தினார்கள்.
திருவாரூரில்…நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி தங்கள் பிள்ளைகளின் கல்வித் திட்டத்தை தொலைநோக்குடையதாக அமைத்துக் கொள்வதற்கு கலந்துகொண்ட அனைவரும் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமிய கூட்டமைப்பு கடலூர் (IFC), யுனைடெட் சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம், கடலூர் மாவட்டம் சார்பாக ” முஸ்லிம் விஞ்ஞானி -2040″ நிகழ்ச்சி 18.02.2023 சனிக்கிழமை அன்று நடைபெற்றது.
நிகழ்வின் துவக்கமாக தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் உயர்கல்வி ஆலோசகர் பேரா.M.முஹம்மது இஸ்மாயில் M.E,M.A .,LLB., அவர்கள் ஆய்வுக் கல்வியின் அவசியம் குறித்தும் , அடுத்த 20 ஆண்டுகளில் முஸ்லிம் சமூகத்தில் ஆய்வாளர்களும் விஞ்ஞானிகளும் உருவாக வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும், இஸ்லாமிய வரலாற்றில் வாழ்ந்த அறிவுஜீவிகள் குறித்தும்
உயிரியல் துறையில் (Life Science ) ஆய்வுக் கல்விக்கான சர்வதேச வாய்ப்புகள் குறித்தும் விரிவாக விளக்கினார்கள்.
அதைத் தொடர்ந்து தொழில் நுட்பத் துறையில் (Technology) அடுத்த 20 ஆண்டுகளில் ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்தும் அதில் நாம் பங்கெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் அறிவியல் தொழில்நுட்பத் துறை ஆராய்ச்சியாளர் சகோ.R.முஹம்மது அனஸ் B.E.,B.Sc .,அவர்கள் விரிவாக விளக்கினார்கள்.
இறுதியில் ஆய்வுக் கல்வி குறித்த மாணவ மாணவிகளின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது.
இந்த மாணவர்கள் கல்லூரியில் சேர்வது முதல் ஆராய்ச்சியாளர் ஆகும் வரை அவர்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சியளித்து வழிகாட்டும் பொறுப்பை தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் ஏற்றுள்ளது.
நிகழ்விற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம், கடலூர் மாவட்ட நிர்வாகிகள் மிகச் சிறப்பாக செய்திருந்தினர்.
12-02-2023 அன்று மதுரை எக்கனாமிக் சேம்பர் & அல் அர்கம் அகாடமி இணைந்து நடத்திய மாணவிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சி பயிலரங்கில் அம்மாபட்டினம் அன்னை கதீஜா அகாடமியின் தாளாளர் ” உம்மத்தின் கல்வியாளர் ” பேராசிரியை S. நஜ்மா ஆலிமா M.A. M.Sc (Psy) அவர்கள் இலக்கு நிர்ணயித்தல் & முனைப்படுத்தல் என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார்கள்.
மதுரை அல்ஹிக்மா அகாடமி வளாகத்தில் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.