கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்.
இன்ஷா அல்லாஹ் வரும் சனிக்கிழமை (14.10.2023) மாலை தென்காசியில்…
கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்.
இன்ஷா அல்லாஹ் வரும் சனிக்கிழமை (14.10.2023) மாலை தென்காசியில்…
கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்.
கோயம்புத்தூர் தமிழகத்தின் பெருளாதார வளர்ச்சியில் (GDP) இரண்டாவது இடம் வகிக்கும் மாவட்டம்.
Pump City of Asia என்றும் அழைக்கப்படுகிறது.600 மோட்டார் பம்ப் செட் தயாரிக்கும் நிறுவனங்கள்,1500 நூற்பு ஆலைகள்,700 வெட் கிரைண்டர் தயாரிப்பு தொழிற்சாலைகள்,128 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்,73 இந்திய – பன்னாட்டு ஆட்டோ மொபைல் நிறுவனங்கள், 99 தனியார் பொறியியல் கல்லூரிகள்,18 அரசு பொறியியல் கல்லூரிகள்,2500 கோழிப் பண்ணைகள்(கோவை – நாமக்கல்),50 ஆயிரம் இயந்திர உதிரி பாக தொழிற்சாலைகள் உள்ளிடட இன்னும் பல……
கடந்த 50 ஆண்டுகளில் பிரம்மாண்டமாக வளர்ச்சியடைந்துள்ள கோவையின் உற்பத்தி தொழிலில் (Manufacturing Business) கோவை முஸ்லிம்களின் பங்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறது.
அடுத்த கட்ட பாய்ச்சலாக திருச்சி கோவை சேலம் ஓசூர் சென்னை உள்ளிட்ட 5 நகரங்களை இணைத்து இராணுவ தளவாட உற்பத்தி முனையத்தை மத்திய அரசு 2020இல் அறிவித்து வேலைகள் நடைபெற்று வருகின்றன.
போர் விமானங்கள் ஹெலிகாப்பட்டர்கள் பீரங்கி டாங்கிகள் ட்ரோன்கள் என்று ஆயுத உற்பத்தி மற்றும் இராணுவ தளவாட உற்பத்தியின் மையமாக கொங்கு பகுதி உருவாகி வருகிறது.
கோவை மாவட்ட உற்பத்தி தொழிலின் அசுர வளர்ச்சியில் படித்த முஸ்லிம் இளைஞர்கள் முழு கவனம் செலுத்த வேண்டும்.பெற்றோரர்கள் இதையே பிள்ளைகளிடம் வலியுறுத்த வேண்டும். நெருக்கடிகளை சந்திப்பவர்களின் செயல் திறன் அதிகமாக இருக்கும். சரியான வழிகாட்டல்கள் வழங்கப்பட வேணடும்.
கல்வியிலும் பொருளாதாரத்திலும் சமூகத்திலும் முன்னேறியவர்கள், தங்களுக்கு அருகில் வாழும் (தங்கள் சமூகத்து) விளிம்பு நிலை மக்களின் வாழ்வையும் கூடவே சேர்த்து மேம்படுத்தும் ஈமானிய முயற்சிகளை செய்யவில்லை என்றால், அந்த விளிம்பு நிலை மக்களில் ஒருசில அறிவற்றவர்கள் செய்யும் சமூகவிரோத செயல்களால், அந்த முன்னேறிய பிரிவினர் தங்களது வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அவமானப்பட வேணடிய சூழல் உருவாகும். இது உலகின் நியதி.
தனிநபர்கள் மட்டுமே வளர்ச்சியடைவது சமூகத்தின் வளர்ச்சியாகாது. அது ஒரு போலியான தோற்றத்தை மட்டுமே கொடுக்கும். ஒட்டுமொத்த சமூகமாக ஊராக மஹல்லாவாக வளர்ச்சியடைவது தான் பாதுகாப்பானதும் பரக்கத்தானதும் நிலையான வளர்ச்சியாகவும் இருக்கும்.
கோவை (தமிழக) முஸ்லிம்களின் சமூகப் பொருளாதார வாழ்நிலை உயர்ந்திடவும், வளரும் சந்ததிகள் கண்ணியமான அடையாளத்துடன் பாதுகாப்பாக வாழ்வதற்கும் நமது பிள்ளைகளுக்கு நவீன உற்பத்தி தொழிலை (Manufacturing Business) இலக்காக கொண்ட அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கல்வியை (Science &Technology Research) முன்னிறுத்துங்கள்.
அடுத்த 20 ஆண்டுகளில் கோவை முஸ்லிம் பிள்ளைகள் ஆராய்ச்சிக் கல்வியிலும் உற்பத்தித் தொழிலிலும் முன்னிலை வகிக்க வேண்டும் என்ற தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படையில் இயங்கும் சமுதாய அமைப்புகளால் மட்டுமே கோவை மக்களுக்கு நம்பிக்கையளிக்க முடியும். நல்லது செய்ய முடியும்.
————————————–
” நெருக்கடிகளுக்கு நிலையான தீர்வு” என்ற தலைப்பில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் முஸ்லிம்களின் கல்வி சமூக பொருளாதார மேம்பாட்டு கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது.







தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் உற்பத்தித் தொழில்கள் (Manufacturing Business) குறித்த இரண்டுநாள் பயிலரங்கம் புதுச்சேரி பைத்துல் ஹிக்மாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறைந்த முதலீட்டில் அதிக இலாபம் ஈட்டும் சிறு குறு தொழில்கள் குறித்தும் அதை ஒரு நிறுவனமாக கட்டமைக்கும் அரசின் விதிமுறைகள் குறித்தும் இந்த பயிலரங்கில் அறிந்து கொள்ளலாம்.
ஒரு தொழிலை மகத்தான சாம்ராஜ்யமாக கட்டமைக்கும் தொலைநோக்கு இலக்கும் அதற்கான அடிப்படை குணங்கள் குறித்த உளவியல் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளன.
தொழில் செய்யும் ஆர்வமுடைய பெண்களும் கலந்து கொள்ளலாம்.
முன்பதிவு கட்டாயம் : 97892 34073
சட்டக் கல்வியின் ஆர்வத்தை அதிகரிக்க ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரி மாணவர்கள் நடத்திய மாதிரி நீதிமன்றம் (Moot Court).
7 ஆண்டுகள் மதரஸா கல்வியில் 6ஆவது ஜும்ரா பயிலும் இவர்கள் உயர்கல்வியில் சட்டப் படிப்பையும் இந்திய ஆட்சிப்பணி (IAS – IPS) தேர்வையும் எழுதுவதை இலக்காக கொண்டவர்கள்.




பைத்துல் ஹிக்மா கல்வி வளாகத்தில் மஸ்ஜிதுர் ரஹ்மத் கட்டுமானப் பணிகள் துவக்க நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மார்க்கப் பேணுதலுடைய, சமூக அக்கறையுடைய, ஆண்களும் பெண்களும் தன்னார்வத்தோடு அதிகளவில் கலந்து கொண்டு துஆ செய்தனர்.
கட்டிடப் பணிகள் விரைவாக முடிந்திட துஆ செய்யுங்கள்.














இன்ஷா அல்லாஹ் நாளை ஞாயிறு (16.07.2023) அன்று …
சென்னை – சேலவாயலில்..
“பெண்களுக்கான தொழில் வாய்ப்பு”
நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெண்கள், கல்லூரி மாணவிகள் , இளம் தொழில்முனைவோர்கள்அவசியம் கலந்து கொள்ளவும்
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் புதுச்சேரி கடுவனுரில் உருவாக்கப்பட்டு வரும் பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனம் மார்க்கக் கல்வி படித்தவர்களை சட்டத் துறைக்கும் அரசுப் பணிகளுக்கும் உருவாக்கும் துல்லியமான இலக்குடன் இயங்கி வருகிறது.
பைத்துல் ஹிக்மாவின் முதல் நிறுவனமான 2018 இல் துவங்கப்பட்ட ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியில் 5 ஆம் ஜும்ரா ஓதிய மாணவர்கள் அனைவரும் 10 ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றதற்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த பாராட்டு விழாவுடன் முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி வளர்ச்சி குறித்த சிறப்பு பயிலரங்கமும் நடைபெற்றது.
நம் பிள்ளைக்கு கிடைக்கும் தரமான உயர்கல்வியும் அதன் மூலம் கிடைக்கப்பெறும் வளங்களும் உம்மத்தின் எல்லாப் பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற வேட்கையோடு விவரம் அறிந்த பெற்றோர்கள் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே ஒரு சமூகமாக முஸ்லிம்கள் வளர்ச்சியடைய முடியும் என்ற தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் கருத்து வலிமையாக முன்வைக்கப்பட்டது.





இளைய தலைமுறையினருக்கு “அடுத்து என்ன செய்ய வேண்டும்” என்ற வழிகாட்டுதலை மிகச்சரியான காலத்தில் வழங்குவதில் தான் ஒரு சமூகத்தின் வளர்ச்சியும் எழுச்சியும் உள்ளடங்கியிருக்கிறது.
வழிகாட்டுதல்கள் இடைவெளி இல்லாமல் வழங்கப்பட்டு அதை உறுதியாக பின்பற்றப்படும் சமூகத்தில் மட்டுமே வளர்ச்சியும் சமூக மாற்றமும் விரைவானதாகவும் நிலையானதாகவும் இருக்கும்.
இளநிலை (UG) பட்டப்படிப்பு முடித்துள்ள மாணவர்களுக்கான இரண்டு நாள் பயிலரங்கத்தை தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் வருகின்ற ஜுலை 8 & 9, 2023 அன்று புதுச்சேரி பைத்துல் ஹிக்மா வளாகத்தில் ஏற்பாடு செய்துள்ளது.
மேற்படிப்பு, ஆராய்ச்சி, கல்வி உதவி,தொழில், இயற்கை வாழ்வியல், குடும்ப உறவுகள், சமூக உறவுகள், வரலாறு, அரசியல் என சகலத்தையும் கவனப்படுத்தி இளைஞர்களின் ஆளுமைத் தன்மையை அதிகரிக்கும் பயிலரங்கம் இது.
உங்கள் வீட்டில் மஹல்லாவில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களை மட்டும் இந்த பயிலரங்கத்தில் கலந்து கொள்ளச் செய்யுங்கள்.
இன்ஷா அல்லாஹ் வரும் சனிக்கிழமை (10.06.2023) அன்று கோவையில்…
முஸ்லிம் விஞ்ஞானி – 2040 நிகழ்ச்சி
அப்பாஸிய கலீஃபா ஹாருன் அல் ரஷீத் அவர்களால் 9 ஆம் நூற்றாண்டில் துவங்கப்பட்ட உலகப்புகழ் பெற்ற ” பைத்துல் ஹிக்மா ” என்ற உயர்கல்வி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் வரலாற்றுச் சாதனைகளை திருச்சியில் நடைபெற்ற உயர்கல்வி மாநாட்டில் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி மாணவிகள் நாடகம் மூலம் காட்சிப் படுத்தினர்.
இஸ்லாமிய வரலாற்றில் கற்றறிந்த அறிஞர் (ஆலிம்) என்றால் அது மார்க்க கல்வியின் நிழலில் உலகின் அனைத்து பயனுள்ள அறிவையும் பெற்ற பல்துறை விற்பன்னர் என்பது தான் அடையாளமாக இருந்துள்ளது என்பதை வரலாறு நமக்கு சான்றளிக்கிறது.
வரலாற்றின் மத்தியகாலத்தில் உலகின் அறிவுத்துறைக்கும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் முஸ்லிம்கள் ஆற்றியுள்ள பங்களிப்புகளை கவனத்தில் கொள்ளாமல் இன்றைய பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் உயர்கல்வியை தேர்வு செய்வது கூடாது.
அது ஈமானிய இலக்கு இல்லாத இன்றைய முதலாளித்துவத்தின் ஊழியர்களாக காகிதத்தில் பட்டங்களை சுமக்கும் வெறும் பட்டதாரிகளாக அந்த பிள்ளைகளை மாற்றிவிடும் பேராபத்து இருக்கிறது.