ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH) மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் இணைந்து நடத்திய “நாளைய உலகம் நமதாகட்டும்” என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, திருச்சி ஏர்போர்ட் அருகிலுள்ள மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசலில், 28.05.2022 (சனிக்கிழமை) அன்று காலை நடைபெற்றது.
JAQH அமைப்பின் திருச்சி மாவட்ட தலைவர், பேரா.M.P.முஹம்மத்., M.A.,M.Phil அவர்கள் அறிமுக உரை மற்றும் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.
JAQH அமைப்பின் மாநில பொதுச் செயலாளர், ஜனாப்.P.நூர் முஹம்மது.,B.Com., அவர்கள் தலைமை உரை ஆற்றினார்கள். இஸ்லாமிய வரலாற்றின் தரவுகளை முன்வைத்து கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்கள். மூத்த கல்வியாளர் அல்ஹுதா நிறுவனங்களின் தலைவர், ஜனாப். T.C அப்துல் மஜீத் அவர்கள் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தார்கள்.
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் நெறியாளர், ஜனாப்.கா.பைசல் அஹமது அவர்கள், “எது கல்வி? அது ஏன் அவசியம்?” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் உயர்கல்வி ஆலோசகர், பேராசிரியர், V.R.அப்துர்ரஹ்மான்.,M.E.,M.A., அவர்கள், “என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?” என்ற தலைப்பில் PowerPoint Presentation மூலம் வகுப்பு நடத்தினார்கள்.
அதன் பிறகு, கேள்வி பதில் நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
JAQH அமைப்பின் மாநில செயலாளர், ஜனாப்.பி.பிரேம் நஸிர் D.M.E., அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.மேலும், இது போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்துவதன் அவசியத்தையும் குறிப்பிட்டார்கள்.
நூற்றுக்கும் அதிகமான மாணவ மாணவியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சி மிகச்சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் மற்றும் தலைமைத்துவ பயிலரங்கம் இன்ஷா அல்லாஹ் மே 29. அன்று புதுச்சேரி பைத்துல் ஹிக்மாவில் துவங்குகிறது.
சகோ. Cmn Saleem அவர்களின் தலைமையில் பலதுறை அறிஞர்கள் பயிற்சியளிக்க உள்ளனர்.
முஸ்லிம் மாணவர்களை சட்டத்துறை அறிஞர்களாகவும், அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்களாகவும், தொழில் முனைவோராகவும் உருவாக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சமூக கவலையுடன் நடத்தப்படும் இந்த பயிலரங்கத்தை மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்வீர்.
இந்த பயிலரங்கம் குறித்த செய்தியை உங்கள் ஊரின் மஹல்லாவின் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியப்படுத்தி பங்குபெறச் செய்வீர்.
மார்க்க கல்வி படித்தவர்களை TNPSC / UPSC தேர்வுகளுக்கு தயார் செய்து அரசின் உயர் அதிகாரப் பொறுப்புகளுக்கு உருவாக்கும் சேவை நிறுவனமாக புதுச்சேரி பைத்துல் ஹிக்மா கட்டமைக்கப்பட்டு வருகிறது.
தற்சமயம் ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரி மற்றும் மகாத்மா காந்தி ஸ்கூல் ஆப் சிவில் சர்வீஸ் என்ற IAS அகாடமியும் இயங்கி வருகிறது.
இதல்லாமல் கல்வி மற்றும் தொழில் ரீதியான பல்வேறு பயிற்சி வகுப்புகள் பைத்துல் ஹிக்மாவில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
ஜாமிஅத்துல் ஹக்மா அரபிக் கல்லூரியின் நான்காம் ஆண்டு நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா 27- 3 – 2022 ஞாயிறு அன்று ஜாமிஆவின் முதல்வர் மெளலானா முஹம்மது கான் பாகவி ஹஸ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மூலிகை பிராய்லர் கோழி பற்றிய ஒருநாள் பயிலரங்கம் புதுச்சேரி பைத்துல் ஹிக்மா வளாகத்தில் நடைபெற்றது.
குர்பானி ஆடுகள் மாடுகள் வளர்ப்பு பராமரிப்பு விற்பனை உள்ளிட்ட கல்நடைத் துறைபில் பெருகிவரும் தொழில் வாய்ப்புகள் குறித்து திருநெல்வேலி கால்நடை பல்கலையின் முன்னாள் பேராசிரியர் முனைவர். பீர் முஹம்மது அவர்களும்…..
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பிராய்லர் கோழியின் தீமைகளையும் அதற்கு மாற்றாக முன்னிறுத்தப்படும் மூலிகை பிராய்லர் கோழிகள் பண்ணை அமைத்தல் தீவனம் உற்பத்தி சந்தைப்படுத்துதல் ஆகியவை குறித்து திண்டுகல் காந்தி கிராம் பல்கலையின் பேராசிரியர் இராமநாதன் அவர்களும் ஆய்வுப்பூர்வமான தகவல்களை வழங்கி பயிற்றுவித்தார்கள்.
கால்நடை வளர்ப்பில் சிறிய பெரிய முதலீடுகளுக்கு தொழில் வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. மிக பிரம்மாண்டமாக வளர்ந்தும் வருகின்றன.
இந்த துறையில் ஆராய்ச்சிகளும் பயிற்றுவித்தல்களும் விடா முயற்சிகளும் தொடர்ச்சியாக நடைபெற்றால் முஸ்லிம்களை வலிமையான தொழில் சமூகமாக மீண்டும் உயர்த்தும் என்பது நிச்சயம்.
மூலிகை பிராய்லர் கோழி தொழிலில் பண்ணை அமைத்தல், பாராமரிப்பு, தீவனம் உற்பத்தி, சில்லரை வணிகம் உள்ளிட்டவை குறித்த ஒருநாள் பயிலரங்கம் புதுச்சேரி பைத்துல் ஹிக்மாவில் 13-3-2022 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற உள்ளது.
பிராய்லர் கோழி உண்டாக்கும் தீமைகளை குறை செல்லிக் கொண்டிருப்பதை விட அதற்கான மாற்றை உருவாக்குவதும் அதை வணிக ரீதியாக வெற்றிபெறச் செய்வதும் நமது முயற்சியாக இருப்பது நல்லது.
எல்லோரும் செய்கின்ற வியாபாரத்தை செய்பவர்கள் வெறும் வியாபாரிகளாகவே இருப்பார்கள். புதிய சிந்தனைகளுடன் துணிச்சலாக முடிவெடுத்து தொழில் செய்பவர்கள் மட்டுமே தொழிலதிபர்களாக உருவாகிறார்கள்.
சிறிய அளவில் நிலம் வைத்திருப்பவர்களுக்கு இந்த தொழில் இலாபகரமாக இருக்கும். குறிப்பாக வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பியவர்களுக்கு கொஞ்சம் இலகுவாகவும் இருக்கும்.
மூலிகை பிராய்லர் பற்றிய அறிவை முதலில் பெற்றுக் கொள்ளுங்கள். சூழல் வாய்க்கும் போது தொழிலில் இறங்குங்கள்.
முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சி என்ற தளத்தில் நின்று சிந்திக்கும் பணியாற்றும் யாரும், இஸ்லாமிய அறிவுத் துறையை அதன் மரபு வழியில் மீள்கட்டமைப்பு செய்யும் முயற்சிகளுக்குத் தான் முன்னுரிமை அளிப்பார்கள்.
இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய எல்லா அறிஞர்களும் தலைவர்களும் அதைத்தான் செய்துள்ளனர்.
இஸ்லாமிய அறிவுத் துறையால் மட்டுமே முஸ்லிம் சமூகத்தின் சிந்தனையை வாழ்வியலை இலக்குடையதாக தரம் உயர்த்தி, அதை உலக மக்களுக்கு ஈர்ப்புடையதாகவும் முன்னிறுத்த முடியும்.
மார்கக்க கல்வி பயின்றுள்ள ஆலிமா முபல்லிஹாக்களுக்கு ” இஸ்லாமிய கல்வி அறிவியல்” (ISLAMIC ACADEMICAL SCIENCES) என்ற தலைப்பில் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இரண்டு நாள் பயிலரங்கில் அல்குர்ஆனையும் ஹதீஸ்களையும் அதன் இலக்கண முறைப்படி ஆழமாக புரிந்து அணுகுவதற்கான அடிப்படைப் பாடங்களை (உஸூல்) தமிழகத்தின் தலைசிறந்த அறிஞர்கள் பயிற்றுவித்தனர்.
என்ற தலைப்பில், இஸ்லாமிய அறிவுத் துறையின் ஆழமான பகுதிகளை பயிற்றுவிக்கும் இரண்டுநாள் பயிலரங்கம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் பிப்.26,27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
தமிழகத்தின் தலைசிறந்த இஸ்லாமிய கல்வி அறிவியல் பேராசிரியர்கள் வகுப்பெடுக்க உள்ளனர்.
இஸ்லாமிய நர்சரி பிரைமரி பள்ளிக்கூடங்கள் மற்றும் நிஸ்வான் மதரஸாக்களின் ஆசிரியைகள், ஆலிமா,ஹாஃபிளா, முபல்லிஹா,அஃப்ஸலுல் உலமா, இளநிலை அரபி மற்றும் இஸ்லாமிக் ஸ்டடீஸ் உள்ளிட்ட அரபுமொழி தொடர்பு புலத்தில் பட்டம் பெற்றுள்ள பெண் அறிஞர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.