Category: 2023

” குழந்தை வளர்ப்பின் 4 படித்தரங்கள் ” – ஆன்லைன் வகுப்பு

” குழந்தை வளர்ப்பின் 4 படித்தரங்கள் ” சகோ.CMN சலீம் அவர்களின் ஆன்லைன் வகுப்பு.

Read More

மாணவிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சி – மதுரை

12-02-2023 அன்று மதுரை எக்கனாமிக் சேம்பர் & அல் அர்கம் அகாடமி இணைந்து நடத்திய மாணவிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சி பயிலரங்கில் அம்மாபட்டினம் அன்னை கதீஜா அகாடமியின் தாளாளர் ” உம்மத்தின் கல்வியாளர் ” பேராசிரியை S. நஜ்மா ஆலிமா M.A. M.Sc (Psy) அவர்கள் இலக்கு நிர்ணயித்தல் & முனைப்படுத்தல் என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார்கள்.

மதுரை அல்ஹிக்மா அகாடமி வளாகத்தில் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

Read More

நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள் – கோவை

இன்ஷா அல்லாஹ் வரும் 31.01.2023 (செவ்வாய்)

அன்று கோவையில்… “நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள்” உம்மத்திற்கான கல்வி & வாழ்வியல் வழிகாட்டுதல் பயிலரங்கம்.

Read More

நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள் – மேல்பட்டாம்பாக்கம்

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கத்தில் ” நமது பிள்ளைகள் நாளையத் தலைவர்கள் ” என்ற கல்வி விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் வழிகாட்டுதலின்படி தங்கள் பிள்ளைகளின் உயர்கல்வியை அமைத்துக் கொள்வதாக இந்நிகழ்ச்சியில் கலந்த கொண்ட ஆண்களும் பெண்களும் தெரிவித்தனர்.

சமுதாய ஆர்வமுள்ளவர்கள் தங்களின் அறிவு நேரம் பொருளாதாரம் ஆகிய மூன்றும் பயனுள்ள வகையில் செலவிடப்பட வேண்டும் என்று விரும்பினால்,

அதன் மூலம் உம்மத்தில் நிலையான மாற்றங்கள் உண்டாக வேண்டும் என்று விரும்பினால்…

உம்மத்தின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாய் நில்லுங்கள்.

Read More

முஸ்லிம் விஞ்ஞானி 2040 – திருவண்ணாமலை

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்,திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக ” முஸ்லிம் விஞ்ஞானி -2040″ நிகழ்ச்சி 28.01.2023 சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

நிகழ்வின் துவக்கமாக தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் உயர்கல்வி ஆலோசகர் பேரா.M.முஹம்மது இஸ்மாயில் M.E,M.A .,LLB., அவர்கள் ஆய்வுக் கல்வியின் அவசியம் குறித்தும் , அடுத்த 20 ஆண்டுகளில் முஸ்லிம் சமூகத்தில் ஆய்வாளர்களும் விஞ்ஞானிகளும் உருவாக வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும், இஸ்லாமிய வரலாற்றில் வாழ்ந்த அறிவுஜீவிகள் குறித்தும்

உயிரியல் துறையில் (Life Science ) ஆய்வுக் கல்விக்கான சர்வதேச வாய்ப்புகள் குறித்தும் விரிவாக விளக்கினார்கள்.

அதைத் தொடர்ந்து தொழில் நுட்பத் துறையில் (Technology) அடுத்த 20 ஆண்டுகளில் ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்தும் அதில் நாம் பங்கெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் அறிவியல் தொழில்நுட்பத் துறை ஆராய்ச்சியாளர் சகோ.R.முஹம்மது அனஸ் B.E.,B.Sc .,அவர்கள் விரிவாக விளக்கினார்கள்.

இறுதியில் ஆய்வுக் கல்வி குறித்த மாணவ மாணவிகளின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது.

இந்த மாணவர்கள் கல்லூரியில் சேர்வது முதல் ஆராய்ச்சியாளர் ஆகும் வரை அவர்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சியளித்து வழிகாட்டும் பொறுப்பை தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் ஏற்றுள்ளது.

நிகழ்விற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்,திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் மிகச் சிறப்பாக செய்திருந்தினர்

Read More

11th இஸ்லாமியப் பள்ளிக்கூடம் துவங்குவதற்கான மூன்று நாள் பயிலரங்கம்

இஸ்லாமியப் பள்ளிக்கூடம் துவங்குவதற்கான மூன்று நாள் பயிலரங்கம் அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

பெண் கல்வியாளர்ளை உருவாக்கும் இலக்குடன் இயங்கும் இக்கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகளும்,இஸ்லாமியப் பள்ளிக்கூடம் துவங்கும் ஆர்வமுடையவர்களும், இரண்டு கல்வியும் இணைந்த அரபு மதரஸாக்களை உருவாக்கும் முயற்சியில் இருக்கும் உலமாக்கள் சிலரும் கலந்து கொண்டனர்.

தமிழக முஸ்லிம் சமூகத்தின் நிலையான கல்வி வளர்ச்சிக்கு இந்த மூன்றுநாள் பயிலரங்கம் கடந்த 11 ஆண்டுகளாக தொடர்ந்து விதைத்துக் கொண்டே இருக்கிறது.

அல்ஹம்துலில்லாஹ்.

Read More