கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி – கோடியக்கரை
இன்ஷா அல்லாஹ் நாளை ..
நாகை மாவட்டம் கோடியக்கரையில்..
கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி
இன்ஷா அல்லாஹ் நாளை ..
நாகை மாவட்டம் கோடியக்கரையில்..
கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி
தமிழகத்தில் சமீபகாலமாக இரண்டு கல்வியிலும் தேர்ச்சி பெற்ற ஆலிம்கள் ஆலிமாக்கள், அதேபோல அரபுமொழியில் பட்டம் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவர்களுக்கான உயர்கல்வி ஆராய்ச்சி வேலைவாய்ப்புகள் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் விசாலமாகி வருகின்றன.
அந்த வாய்ப்புகளை கவனப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி சார்பில் இரண்டு கல்வியிலும் தேர்ச்சி பெற்ற ஆலிம் ஆலிமாக்களுக்கு அரபுநாடுகளில் ஊக்கத் தொகையுடன் கூடிய உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த ஆன்லைன் வகுப்பு இன்ஷா அல்லாஹ்…. வரும் ஞாயிற்றுக் கிழமை மாலை 4 -5 மணிக்கு நடைபெற உள்ளது.
ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளுங்கள். இந்த செய்தியை சம்பந்தப்பட்டவர்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களையும் கலந்து கொள்ளச் செய்யுங்கள்.
கடந்த 50 ஆண்டுகளில் அரபுலக பல்கலைக்கழகங்களை கேரளா ஹைதரபாத் இலங்கை வாழ் முஸ்லிம்கள் பயன்படுத்தியது போன்று தமிழக முஸ்லிம்கள் பயன்படுத்தவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் புதுச்சேரி – கடுவனூரில் அமைந்துள்ள பைத்துல் ஹிக்மா கல்வி வளாகத்தில் இயங்கி வரும் ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியின் 2024 – 25 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு இன்று நடைபெற்றது.




கோவையில்….
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் “இஸ்லாமிய நாகரிகம் ” என்ற தலைப்பில் இரண்டுநாள் பயிலரங்கம் நடைபெற்றது.
பெண் கல்வியாளர்கள் மற்றும் இஸ்லாமியப் பள்ளிக்கூடங்களின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கோவை திருப்பூர் பொள்ளாச்சி அதன் சுற்றுவட்டார பிள்ளைகளுக்கு தினந்தோறும் பாடம் எடுக்கும் அறிவார்ந்த ஆசிரியை பெருமக்களிடம்…
இஸ்லாமிய அறிவுத்துறை மரபின் அடிப்படையில் நம் பிள்ளைகளுக்கான கல்விமுறை எப்படி இருக்க வேண்டும்,வீட்டில் வளரும் பிள்ளைகளை எந்தெந்த துறைகளுக்கு எப்படி உருவாக்க வேண்டும், அதற்கான தேவைகளும் சமூக அரசியல் நெருக்கடிகளும் என்ன…,
அடுத்த பத்தாண்டுகளில் கோவையின் சமூகப் பொருளாதார தொழில்துறையின் வளர்ச்சி எப்படி இருக்கப் போகிறது, அதில் முஸ்லிம்களின் பங்களிப்புகள் எப்படியிருக்க வேண்டும்…,
இவை குறித்த கருத்துக்கள் அனைத்தும் ஆதாரங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டன.
சமூகத்தில் வளர்ச்சியையும்,நெருக்கடிகளுக்கு நிலையான தீர்வுகளையும் கொண்டுவரும் நீண்டகால திட்டத்தையும் அதற்காக உழைத்திடும் மனப்பக்குவதையும் அறிவுத்திறன் வாய்ந்த கல்வியாளர்களிடம் கவனப்படுத்தினோம் என்ற மனநிறைவு இப்பயிலரங்கில் கிடைத்தது.
அல்ஹம்ந்துலில்லாஹ்.






கோவையில்….
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் ” இஸ்லாமிய நாகரீகம் ” என்ற தலைப்பில் இரண்டுநாள் பயிலரங்கம் பிப்.17,18 ஆகியத் தேதிகளில் நடைபெற உள்ளது.
சொந்த வரலாற்றையும் பண்பாட்டையும் அறிந்து கொள்வதில் அதிகப்படியான ஆர்வத்தை காட்டும் இளைஞர்கள் வாழும் சமூகம் ஒருபோதும் பின்னடைவை சந்திக்காது.
அந்த வரலாற்றுப் பாரம்பரியத்தினூடாக தங்களது வாழ்க்கை முறையையும் எதிர்காலத்துக்கான இலக்கையும் நிர்ணயித்துக் கொள்ளும் அறிவார்ந்த இளைஞர்களே இந்த உலகை வழிநடத்தும் தலைவர்களாக மாறுகிறார்கள்.
இளம் ஆலிம்கள் ஆலிமாக்கள் ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் என்று கற்றறிந்த இளைஞர்களின் அறிவையும் வாழ்வையும் இஸ்லாமிய வரலாற்றைக் கொண்டு கூர்தீட்டும் பயிலரங்கம் இது.
பல துறைகளிலும் விசாலமான அறிவுடைய அறிஞர்களால் மட்டுமே மனிதர்கள் சமூகங்கள் நாடுகள் சந்திக்கும் ஆழமான சிக்கல்களுக்கு நிலையானத் தீர்வை கண்டறிய முடியும்.
ஆட்சிப்பணி (Civil Service) கொள்கை வகுப்பாளர்கள் (Policy Makers)அரசியல் வியூகவாதிகள் (Political Strategists) போன்று ஆட்சி அதிகாரத்துடன் தொடர்புடைய துறைகள் அனைத்துக்கும் அடிப்படைத் தகுதியே பல்துறை அறிவுதான்.
மார்க்கக் கல்வி உலகக்கல்வி இணைந்த இஸ்லாமிய கல்வித்திட்டம் பல்துறை அறிஞர்களைத் தான் உருவாக்கும் என்பதற்கு மத்தியகால இஸ்லாமிய அறிஞர்களின் அடையாளமே சாட்சி.
பல்துறை அறிஞர் (Polymath) என்ற ஆற்றல்மிக்க அறிவுத்திறனை அடைவது எப்படி என்பது குறித்து புதுச்சேரி பைத்துல் ஹிக்மாவில் இயங்கும் ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியின் 5,6 ஆம் ஜும்ரா மாணவர்களுக்கு இன்று வகுப்பு நடைபெற்றது.




தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் சட்டக்கல்வி மாணவர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கான வாழ்வியல் இலக்கு நிர்ணயிக்கும் ஒருநாள் பயிலரங்கம் சென்னையில் பிப்.10 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.
சட்டக்கல்வி என்பது தொழில்முறை படிப்பு (Professional Course) மட்டுமல்ல.இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்கும் அறிவுப் போர்களமாக சட்டக் கல்வியை கருதவேண்டும்.
நுண்ணறிவுடைய வழக்கறிஞர் – முனைவர் பட்டம் (Ph.D in LAW) பெற்ற சட்டத்துறை ஆராய்ச்சியாளர். சட்டம் படிக்கும் உம்மத்தின் பிள்ளைகளுக்கான வாழ்வியல் இலக்கு இது.
இந்த இலக்கை பயிற்றுவித்து அதை அடைவதற்கு அனைத்து வகைகளிலும் உதவியாக இருப்பதே இந்த ஒருநாள் பயிலரங்கம் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் முதன்மை நோக்கம்.
1990 களில் முஸ்லிம் சமூகத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டுமே சட்டம் பயின்றனர். அவர்களும் கூட வழக்கறிஞர் தொழிலை ஒரு மதிப்புமிக்க அடையாளமாக மட்டுமே கருதி சட்டம் பயின்றனர்.
2000க்குப் பிறகு சட்டம் பயிலும் முஸ்லிம் மாணவர்கள் பெரும்பாலும் தாங்கள் எதிர்கொள்ளும் சமூக அரசியல் அழுத்தங்கள் காரணமாக சட்டம் படிக்கின்றனர். இவர்களிடம் சட்ட நுட்பங்களும் சமூக அக்கறையும் அர்ப்பணிப்பு சிந்தனையும் மிகைத்திருக்கிறது.
இந்த மாணவர்கள் தங்களுக்கென மிகச்சரியான இலக்கை நிர்ணயித்துக் கொண்டு பயணித்தால் உம்மத்தின் நம்பிக்கைக்குரிய சொத்துக்களாக உயர்ந்து நிற்பார்கள்.
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் சட்டக்கல்வி மாணவர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கான வாழ்வியல் இலக்கு நிர்ணயிக்கும் ஒருநாள் பயிலரங்கம் சென்னையில் நடைபெற்றது.
ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி முஹம்மது ஜியாவுதீன் அவர்களும்,அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் (SOEL) சர்வதேச சட்டத்துறை பேராசிரியர் முனைவர் முஜாஹிதுல் இஸ்லாம் அவர்களும் மனித உரிமை வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் அவர்களும் கலந்து கொண்டு தங்களது அறிவையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
சட்டம் படிக்கும் மாணவர்களின் சமூகப் பொறுப்புகள் என்ன என்பதையும், வழக்கறிஞர் தொழிலைக் காட்டிலும் அதிகாரத்தையும் பொருளாதாரத்தையும் ஒருசேர குவித்திடும் உலகளாவிய வாய்ப்புகள் குறித்தும் நான் வகுப்பெடுத்தேன்.
உம்மதிற்கு எதிரான சமூக அரசியல் நெருக்கடிகளை எதிர்மறையாக பரப்பி சமூகத்தை பதற்றமடைய வைப்பதை விட அந்த நெருக்கடிகளை அறிவோடும் திறனோடும் எதிர்கொள்ளும் ஆற்றலை இளம் தலைமுறையிடம் வளர்த்தெடுப்பது தான் நிரந்தர தீர்வாக இருக்கும்.









ஜனவரி 14,15 ஆகிய தேதிகளில் “இஸ்லாமிய நாகரிகம்” என்ற தலைப்பில் சென்னையில் இரண்டுநாள் வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி காலத்தில் ஆளுமைமிக்க சந்ததிகளை உருவாக்குவதற்கு இஸ்லாமிய வரலாற்றுப் படிப்பினைகளும் வழிகாட்டுதல்களும் என்ன என்பதை இன்றைய படித்த தலைமுறை அறிந்துகொள்ள வேண்டும்.
வாழ்க்கையின் தடுமாற்றங்களையும் எதிர்காலம் குறித்த பதற்றங்களையும் குறைத்திட இந்த வகுப்பு உங்களுக்கு பெரிதும் உதவி செய்யும்.
ஆலிம்கள் ஆலிமாக்கள் ஆசிரியர்கள் கல்லூரி மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் என உம்மத்தில் கருத்துச் சொல்லும் வாய்ப்பை பெற்றவர்களில் வரலாற்று ஆர்வமுடையவர்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.
வகுப்பில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
முன்பதிவு கட்டாயம் :
” இஸ்லாமிய நாகரிகம் ” என்ற தலைப்பில் இரண்டுநாள் பயிலரங்கம் சென்னையில் நடைபெற்றது.
படித்த இளைஞர்களும் மதரசா மாணவர்களும் தங்களது முன்னோர்களின் வாழ்வையும் காலச்சார மரபுகளையும் அறிந்து அதன் நிழலில் தங்களுக்கான எதிர்கால இலக்கை நிர்ணயித்துக் கொள்ள ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
பள்ளிப்பருவத்தில் தங்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய இந்த வாழ்வியல் பாடம் இத்தனை ஆண்டுகளுக்குப்பிறகு இந்த இரண்டுநாள் பயிலரங்கத்தில் கிடைத்ததாக குறிப்பிட்டனர்.
முஸ்லிம் சமுதாயத்தில் இஸ்லாமிய வரலாறும் நாகரிக மரபுகளும் பயிற்றுவிக்கப்படுவது அதிகரித்தால் இளைஞர்கள் ஒருபோதும் வழிதவற மாட்டார்கள்.
வாழ்வில் எவ்வளவு உச்சநிலைக்கு சென்றாலும் தன் கலாச்சாரத்தையும் தன்மீதுள்ள சமூகப் பொறுப்புகளையும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.




