
இஸ்லாமியப் பள்ளிகள் துவங்குவதற்கான மூன்றுநாள் பயிலரங்கம் சிறப்பாக நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
இஸ்லாமியப் பள்ளிகள் துவங்குவதற்கான மூன்றுநாள் பயிலரங்கம் சிறப்பாக நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் ஆலிமா பட்டதாரி இறுதியாண்டு மாணவிகளுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் இந்த பயிலரங்கில் கல்வி நிறுவனம் துவங்கும் ஆர்வமுள்ள பலரும் கலந்து கொண்டனர்.
தமிழக முஸ்லிம்களின் ஆரம்பக்கல்வி முதல் ஆய்வுக்கல்வி வரை இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட வேண்டும்.
இரண்டு கல்வியிலும் பட்டம் பெற்ற ஆயிரக்கணக்கான பெண் கல்வியாளர்கள் உருவாக்கப்பட வேண்டும்.
முஸ்லிம்களால் நடத்தப்படும் பள்ளி கல்லூரிகளில் (முஸ்லிம்களுக்கு) இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட வேண்டும்.
இஸ்லாமியப் பள்ளிக்கூடம் இல்லாத முஹல்லாக்களில் புதிய நர்சரி பிரைமரி பள்ளிக்கூடங்கள் துவங்கப்பட வேண்டும்.
மார்க்கக் கல்வி பயிலும் ஆலிம்களை பள்ளி கல்லூரிகளின் ஆசிரியர் பேராசிரியர்களாக உருவாக்கும் இலக்குடன் இரண்டு கல்வியும் இணைக்கப்பட்ட அரபு மதரஸாக்கள் துவங்கப்பட வேண்டும்.
இந்த இலக்கை நோக்கிய செயல்திட்டங்கள் தான் இந்த மூன்றுநாள் பயிலரங்கின் கற்கை நெறிகளாக அமைக்கப்பட்டிருந்தன.
முஸ்லிம் பெண்கள் கல்வியாளர்களாக கல்வித்துறை ஆளுமைகளாக உருவாக வேண்டும் என்ற சிந்தனையை தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் கடந்த கால் நூற்றாண்டு காலமாக விதைத்து வருகிறது.
உம்மத்தின் பெண்களிடம் மகத்தான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.