குழந்தை பிறப்பு குறைவது மிகப்பெரும் பேரிடராக மாறும்.
தென்னிந்திய மாநிலங்களில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து மிக ஆபத்தான நிலையை அடைந்துள்ளது. அதில் தமிழகம் முதன்மை இடம் வகிக்கிறது.
ஆந்திரா 1.5
தெலங்கானா 1.5
கேரளா 1.5
கர்நாடக 1.6
————-
பீகார் 3.1
உ .பி 2.7
ம.பி 2.9
குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தால் முதியோர் எண்ணிக்கை கூடி அவர்கள் ஆதரவற்று விடப்படும் நிலை உண்டாகும்.குடும்பங்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படும். ஆண்கள் மீது பொருளாதார சுமைகளும் சமூகப் பொருப்புகளும் அதிகரிக்கும்.
தென்னிந்திய மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்து அரசியல் அதிகாரத்திலும் நாட்டின் வளங்கள் பகிர்விலும் பெரும் இடைவெளிகள் உண்டாகும்.
இப்போது கூட வடஇந்திய தொழிலாளர்கள் இல்லாமல் தமிழகத்தில் எந்த தொழிற்சாலைகளும் உணவகங்களும் வேளாண் பணிகளும் இயங்க முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது.
நாட்டிலேயே முதியோர்கள் அதிகமுடைய மாநிலமாக தமிழகம் இரண்டாம் இடம் வகிக்கிறது.
இது சாதி மதம் கடந்து தமிழ்நாடு தமிழ்ச்சமூகம் என்ற விசாலமான பார்வையில் அணுகப்பட வேண்டிய மிக முக்கியமான நெருக்கடி.
சரியான பருவத்தில் திருமணம் செய்து கொள்வதற்கும் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கும் திட்டமிட்டு இடையூறு ஏற்படுத்தியதால் சீனா ஜப்பான் கொரியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இன்று நிலை தடுமாறி நிற்கின்றன.
இயற்கைக்கு எதிரான இந்த கலாச்சாரத்தை இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்தியாவின் மீதும் திணித்தனர்.அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வதை அநாகரிக கலாச்சாரம் என்று மக்களின் சிந்தனையில் பதித்தனர். வலுக்கட்டாயமாக குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை செயல்படுத்தினர்.
குழந்தைகள் அமானிதம் என்பதையும் வளம் பெருக்கும் செல்வங்கள் என்பதையும் குடும்பப் பண்பாடாக கொண்டுள்ள முஸ்லிம்களுக்குள்ளும் இந்த மேற்கத்திய கலாச்சாரம் ஊடுருவிவிட்டது.
முதியோர்கள் சொத்துக்கள் குடும்பங்கள் வழிபாட்டுத் தளங்கள் இவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றல் உழைக்கின்ற திறனுடைய இளைஞர்கள் எண்ணிக்கை குறையாமலும் அவர்கள் வழிதவறி செல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை சமூகப் பொறுப்பாளர்களுக்கு இருக்கிறது.
அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வதை ஆர்வப்படுத்தி குடும்பங்கள் துவங்கி ஜுமுஆ மேடைகள் வரை அனைத்து வகைகளிலும் விரிவான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய நெருக்கடியான காலம் இது.
-CMN SALEEM