
திருநெல்வேலி எக்கனாமிக் சேம்பர் சார்பில் தொழில் வளர்ச்சி சிறப்பு வகுப்பு
திருநெல்வேலி எக்கனாமிக் சேம்பர் சார்பில் அதன் உறுப்பினர்களுக்கு முஸ்லிம்களின் தொழில் வளர்ச்சி என்ற தலைப்பில் சிறப்பு வகுப்பு நடைபெற்றது.
முஸ்லிம் சமூகத்தில் அறிவுப் பெருளாதாரம் (Knowledge Economy) உற்பத்தித் தொழில் (Manufacturing Business) இவை குறித்த விழிப்புணர்வும் பயிற்சியும் அளிக்கப்பட வேண்டிய அவசியத்தை பகிர்ந்து கொண்டோம்.
எதிர்காலத்தில் பெருக இருக்கும் சில உற்பத்தித் தொழில் குறித்தும் கவனப்படுத்தப்பட்டது.
தொழில் துறையில் இருப்பவர்கள் ஒரு சமூகமாக சிந்தித்து ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு (Community coordination) கைகோர்த்து பயணிக்கும் இஸ்லாமிய குணம் முஸ்லிம்களின் பொதுச் சிந்தனையாக வளர்த்தெடுக்கப்பட்டால் மட்டுமே முஸ்லிம்கள் கார்ப்பரேட் நிறுவனங்களை உருவாக்கவும் அதை சட்ட சமூக அரசியல் ரீதியாக பாதுகாக்கவும் முடியும்.
முஸ்லிம்களின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிகள் அனைத்தும் உற்பத்தி தொழிலை இலக்காக கொண்டு அமைந்திடும் வகையில் வளரும் தலைமுறைக்கு பயிற்சியளிக்க வேண்டும்.