
திருவள்ளூர் மாவட்டத்தில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 163 ஜமாஅத் நிர்வாகம் மற்றும் உலமாக்கள் கூடிய அனைத்து ஜமாஅத் ஒருங்கிணைப்பு கமிட்டியின் கூட்டம் தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ள ஆரம்பாக்கத்தில் நடைபெற்றது.
எனது உரையின் சிறு பகுதி :
” முஸ்லிம்களின் நிலையை மாற்றி அமைத்திடும் நீண்டகால செயல்திட்டங்கள் தான் இன்றையத் தேவை.
ஒவ்வொரு முஹல்லாவிலிருந்தும் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வெழுதும் ஒரு 10 மாணவர்களை தேர்ந்தெடுத்து மாவட்ட ஜமாஅத் ஒருங்கிணைப்பு கமிட்டியிடம் ஒப்படையுங்கள்.
அவர்களை கல்லூரியில் சேர்த்து தொடர்ச்சியாக பயிற்சியளித்து உருவாக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
இன்ஷா அல்லாஹ் அடுத்த 5 ஆண்டுகளில் 163 முஹல்லாவின் சுமார் 1500 மாணவர்களில் பலர் அறிவியல் உயிரியல் துறை இளம் ஆராய்ச்சியாளர்களாக வீரியமான வழக்கறிஞர்களாக IAS IPS தேர்வெழுதுபவர்களாக உருவாகி வந்து உங்கள்முன் நிற்பார்கள்.
தளர்ந்து விடாமல் இந்த செயல் திட்டத்தை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தினால் ஐந்தே ஆண்டுகளில் மகத்தான மாற்றங்களை காண்பீர்கள்.
உங்கள் முஹல்லாவாசிகளின் வாழ்க்கை நிலை மேம்படும். ஜக்காத் ஸதக்கா கொடுக்கக் கூடியவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அவர்களின் சந்ததிகள் யாரும் வறுமையில் சிக்க மாட்டார்கள்.
நமது கவலைகளும் புலம்பல்களும் மட்டுமே சமுதாயத்தின் நிலையை மாற்றி அமைத்து விடாது.
நல்ல நிய்யத்துடன் முன்னெடுக்கப்படும் சமுதாயப் பணிகள் ஏற்றஇறக்கங்களை சந்திக்குமே தவிர ஒருபோதும் தோல்வியடையது “
– CMN SALEEM