வக்ஃப் சட்ட திருத்த மசோதா
நாடாளுமன்ற கூட்டுக்குழு இறுதி செய்துள்ள வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை உச்சநீதிமன்றத்தின் மூலமாக அல்லது ஆட்சி மாற்றத்தின் மூலமாக மட்டுமே அகற்ற முடியும். அப்படியே அகற்றினாலும் அதை வேறொரு வடிவத்தில் கொண்டுவரும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.
பள்ளிவாசல்கள் மதரஸாக்கள் வக்ஃப் சொத்துக்கள் இவற்றை இந்திய அறக்கட்டளைச் சட்டத்தின் (Religious and Charitable Trust) கீழ் பதிவு செய்து கொள்வது நிரந்தர பாதுகாப்பை (ஓரளவுக்கு) வழங்கும்.
ஆளுமைமிக்க சட்ட வல்லுனர்களின் தேவைகள் அதிகரித்து கொண்டே வருகிறது என்பதை கடந்த 25 ஆண்டுகளாக நாங்கள் கூறி வருவதை கவனத்தில் கொள்ளுங்கள்.
நாம் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் இனிவரும் ஆலிம்கள் ஜமாஅத் பொறுப்பாளர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடும் இளைஞர்கள் உள்ளிட்டோர் கட்டாயம் சட்டம் படித்தவர்களாக இருக்க வேண்டிய நெருக்கடியை காலமும் சூழலும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
அது மட்டுமல்ல. சர்வதேச நீதிமன்றங்களிலும் ஆளுமைமிக்க வழக்கறிஞர்களாக அதிகாரம் பெற வேண்டிய நெருக்கடியும் அதிகரிப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
-CMN SALEEM