
இதை நினைவில் வைத்துளீர்களா….?
உழைப்பு இல்லாமல் எவ்வளவு நாட்கள் இருந்தாலும் சோற்றுக்கு பஞ்சமில்லை என்ற தற்சார்பு வாழ்க்கை வாழ்ந்த மக்களை பிறந்த மண்ணையும் மரபு வாழ்வியலையும் விட்டு வஞ்சகமாக விரட்டினர்.
முதலாளித்துவம் உருவாக்கிய மனித பண்ணைகளான பெருநகரங்களிலும் தொழிற்சாலைகளிலும் மாதஊதிய பணியாளர்களாக மாற்றி அதுதான் நவீன வாழ்க்கை (Modern Life) என்று மக்களின் சிந்தனையை சிதைத்தனர்.
அறிவியல் தொழிநுட்ப கண்டுபிடிப்புகளை கொண்டு உலக மக்களின் அணைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து விடலாம் அதன் மூலம் உலகத்தை நம் வசப்படுத்தி விடலாம் என்ற கனவுலகில் மிதந்த முதலாளித்துவம் தொழில்புரட்சி காலத்திற்குப் பிறகு (18 ஆம் நூற்றாண்டு) முதன் முறையாக இப்போது மரண அடியை சந்தித்துள்ளது.
அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட உலக முதலாளித்துவத்தின் கோட்டைகள் நொறுங்கி விழத் துவங்கியுள்ளன.
” இது முதலாளித்துவ சித்தாந்தத்திற்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கப் போகிறதா அல்லது முதலாளித்துத்தின் முதுகெலும்பை முறித்துப் போடப் போகிறதா என்பது இன்னும் ஓரிரு மாதங்களில் தெரிய வந்துவிடும் ” என்று முதலாளித்துவ கொள்கை வகுப்பாளர்கள் (Policy Makers) உலக ஊடகங்களில் தொடர்ந்து எழுதி (கதறி) வருகின்றனர்.
98 சதவிகித இந்திய சமூகத்திற்கு வைரஸ் பற்றிய அச்சத்தை விட வாழ்வாதார அச்சமே இப்போது மிகுதியாக உள்ளது. அது தான் எதார்த்தம்.
மீண்டும் தற்சார்பு மரபு வாழ்க்கைக்கு திரும்புவதை தவிர வேறு வழியில்லை என்ற எதார்த்தத்தை நாம் புரிந்து கொள்வோம்.
மரபு மட்டுமே பாதுகாப்பானது.உணவிற்கு உத்திரவாதம் அளிக்க கூடியது.