“இஸ்லாமிய நாகரிகம் ” – கோவை
கோவையில்….
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் “இஸ்லாமிய நாகரிகம் ” என்ற தலைப்பில் இரண்டுநாள் பயிலரங்கம் நடைபெற்றது.
பெண் கல்வியாளர்கள் மற்றும் இஸ்லாமியப் பள்ளிக்கூடங்களின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கோவை திருப்பூர் பொள்ளாச்சி அதன் சுற்றுவட்டார பிள்ளைகளுக்கு தினந்தோறும் பாடம் எடுக்கும் அறிவார்ந்த ஆசிரியை பெருமக்களிடம்…
இஸ்லாமிய அறிவுத்துறை மரபின் அடிப்படையில் நம் பிள்ளைகளுக்கான கல்விமுறை எப்படி இருக்க வேண்டும்,வீட்டில் வளரும் பிள்ளைகளை எந்தெந்த துறைகளுக்கு எப்படி உருவாக்க வேண்டும், அதற்கான தேவைகளும் சமூக அரசியல் நெருக்கடிகளும் என்ன…,
அடுத்த பத்தாண்டுகளில் கோவையின் சமூகப் பொருளாதார தொழில்துறையின் வளர்ச்சி எப்படி இருக்கப் போகிறது, அதில் முஸ்லிம்களின் பங்களிப்புகள் எப்படியிருக்க வேண்டும்…,
இவை குறித்த கருத்துக்கள் அனைத்தும் ஆதாரங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டன.
சமூகத்தில் வளர்ச்சியையும்,நெருக்கடிகளுக்கு நிலையான தீர்வுகளையும் கொண்டுவரும் நீண்டகால திட்டத்தையும் அதற்காக உழைத்திடும் மனப்பக்குவதையும் அறிவுத்திறன் வாய்ந்த கல்வியாளர்களிடம் கவனப்படுத்தினோம் என்ற மனநிறைவு இப்பயிலரங்கில் கிடைத்தது.
அல்ஹம்ந்துலில்லாஹ்.