இஸ்லாமிய பள்ளிக்கூடம் துவங்குவதற்கான பயிலரங்கம்
தமிழக முஸ்லிம்களின் ஆரம்பக்கல்வி முதல் ஆய்வுக்கல்வி வரை இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட வேண்டும் என்ற ஒற்றை இலக்கில் இயங்கும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் கடந்த 11 ஆண்டுகளாக இஸ்லாமிய பள்ளிக்கூடம் துவங்குவதற்கான மூன்றுநாள் பயிலரங்கத்தை நடத்தி வருகிறது.
2024 – ஜனவரி 5,6,7 ஆகிய மூன்று நாட்கள் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் இந்த பயிலரங்கம் நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பெண் கல்வியாளர்களை உருவாக்கும் தொலைநோக்கு இலக்குடன் இயங்கும் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் UG – ஆலிமா இறுதியாண்டு மாணவிகள் இந்த மூன்றுநாள் பயிலரங்கில் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றனர்.
கல்வித்துறையில் சாதனை படைக்கவும், ஒரு நர்சரி பிரைமரி பள்ளிக்கூடத்தை துவங்கவும் அதை திறனோடு நிர்வகிக்கவும் தேவையான அனைத்து பயிற்சிகளையும் இந்த மாணவிகள் பெற்றுள்ளனர்.