கல்விச் சிந்தனையாளர்களை உருவாக்கும் இரண்டு நாள் பயிலரங்கம்
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் கல்விச் சிந்தனையாளர்களை உருவாக்கும் இரண்டுநாள் பயிலரங்கம் பைத்துல் ஹிக்மாவில் நடைபெற்றது.
முஸ்லிம் உம்மத்துக்கு 6 துறைகளில் பயிற்சியளிக்கும் சிறப்பு பயிற்சியாளர்களை (Trainers) உருவாக்குவதே இந்த பயிலரங்கின் நோக்கம்.
இஸ்லாமிய கல்வி வரலாற்றுப் பயிற்சியாளர் (Islamic Educational History Trainer)
உயர்கல்வி வழிகாட்டி (Career Counselor)
அறிவியல் ஆலோசகர் (Scientific Counselor)
தொழில் பயிற்சியாளர் (Business Coach)
இயற்கை வாழ்வியல் பயிற்சியாளர் (Lifestyle Trainer)
முனைப்படுத்தும் சொற்பொழிவாளர் (Motivational Speaker)
பட்டதாரிகள் இளம் ஆலிம்கள் ஆலிமாக்கள் என பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு மஹல்லாவிலும் பயற்சி வகுப்புகளை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இன்றைய முஸ்லிம் உம்மத்தின் வேருக்கு நீர்பாய்ச்சும் இந்த சமூகப் புனரமைப்பு பணிகளுக்கு சமூக அக்கரையும் விசால மனமும் கொண்ட அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுகிறோம்.