கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்
அடுத்த கால் நூற்றாண்டு காலத்திற்கு தமிழக முஸ்லிம் வீடுகளிலும், சமூகத்தின் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகள் அனைத்திலும் “ஆராய்ச்சிக் கல்வி – ஆராய்ச்சிக் கல்வி ” என்று முழங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
ஆராய்ச்சிக்கல்வி தான் உம்மத்தின் கல்விசார் இலக்கு.
பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் என்று யாரை சந்தித்தாலும் ஆராய்ச்சிக் கல்வியை முன்னெடுங்கள் என்று கூறுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதன்பலனாக நமது கணக்கில் நன்மைகள் வரவு வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.சிலகாலங்களில் அறிவியல் துறையில் இளம் ஆராய்ச்சியாளர்கள் துளிர்விட்டு முளைப்பதை காணும் வாயப்பும் நமக்கு கிடைக்கும்.
மண்ணில் விழுகின்ற விதைகள் எல்லாம் முளைத்து விடுவதில்லை. எந்த விதை முளைக்க வேண்டும் என்பது இறைவனுடைய விருப்பம் சார்ந்தது. ஆனால் தளர்ந்து விடாமல் விதைத்துக் கொண்டே இருப்பது ஒன்றே நமது கடமை.
சென்னை புதுப்பேட்டை மக்கள் கூட்டமைப்பு சார்பில் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மெளலவி ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்களும் நானும் கலந்து கொண்டோம்.