
கோவையில் – ” நெருக்கடிகளுக்கு நிலையான தீர்வு”
கோயம்புத்தூர் தமிழகத்தின் பெருளாதார வளர்ச்சியில் (GDP) இரண்டாவது இடம் வகிக்கும் மாவட்டம்.
Pump City of Asia என்றும் அழைக்கப்படுகிறது.600 மோட்டார் பம்ப் செட் தயாரிக்கும் நிறுவனங்கள்,1500 நூற்பு ஆலைகள்,700 வெட் கிரைண்டர் தயாரிப்பு தொழிற்சாலைகள்,128 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்,73 இந்திய – பன்னாட்டு ஆட்டோ மொபைல் நிறுவனங்கள், 99 தனியார் பொறியியல் கல்லூரிகள்,18 அரசு பொறியியல் கல்லூரிகள்,2500 கோழிப் பண்ணைகள்(கோவை – நாமக்கல்),50 ஆயிரம் இயந்திர உதிரி பாக தொழிற்சாலைகள் உள்ளிடட இன்னும் பல……
கடந்த 50 ஆண்டுகளில் பிரம்மாண்டமாக வளர்ச்சியடைந்துள்ள கோவையின் உற்பத்தி தொழிலில் (Manufacturing Business) கோவை முஸ்லிம்களின் பங்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறது.
அடுத்த கட்ட பாய்ச்சலாக திருச்சி கோவை சேலம் ஓசூர் சென்னை உள்ளிட்ட 5 நகரங்களை இணைத்து இராணுவ தளவாட உற்பத்தி முனையத்தை மத்திய அரசு 2020இல் அறிவித்து வேலைகள் நடைபெற்று வருகின்றன.
போர் விமானங்கள் ஹெலிகாப்பட்டர்கள் பீரங்கி டாங்கிகள் ட்ரோன்கள் என்று ஆயுத உற்பத்தி மற்றும் இராணுவ தளவாட உற்பத்தியின் மையமாக கொங்கு பகுதி உருவாகி வருகிறது.
கோவை மாவட்ட உற்பத்தி தொழிலின் அசுர வளர்ச்சியில் படித்த முஸ்லிம் இளைஞர்கள் முழு கவனம் செலுத்த வேண்டும்.பெற்றோரர்கள் இதையே பிள்ளைகளிடம் வலியுறுத்த வேண்டும். நெருக்கடிகளை சந்திப்பவர்களின் செயல் திறன் அதிகமாக இருக்கும். சரியான வழிகாட்டல்கள் வழங்கப்பட வேணடும்.
கல்வியிலும் பொருளாதாரத்திலும் சமூகத்திலும் முன்னேறியவர்கள், தங்களுக்கு அருகில் வாழும் (தங்கள் சமூகத்து) விளிம்பு நிலை மக்களின் வாழ்வையும் கூடவே சேர்த்து மேம்படுத்தும் ஈமானிய முயற்சிகளை செய்யவில்லை என்றால், அந்த விளிம்பு நிலை மக்களில் ஒருசில அறிவற்றவர்கள் செய்யும் சமூகவிரோத செயல்களால், அந்த முன்னேறிய பிரிவினர் தங்களது வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அவமானப்பட வேணடிய சூழல் உருவாகும். இது உலகின் நியதி.
தனிநபர்கள் மட்டுமே வளர்ச்சியடைவது சமூகத்தின் வளர்ச்சியாகாது. அது ஒரு போலியான தோற்றத்தை மட்டுமே கொடுக்கும். ஒட்டுமொத்த சமூகமாக ஊராக மஹல்லாவாக வளர்ச்சியடைவது தான் பாதுகாப்பானதும் பரக்கத்தானதும் நிலையான வளர்ச்சியாகவும் இருக்கும்.
கோவை (தமிழக) முஸ்லிம்களின் சமூகப் பொருளாதார வாழ்நிலை உயர்ந்திடவும், வளரும் சந்ததிகள் கண்ணியமான அடையாளத்துடன் பாதுகாப்பாக வாழ்வதற்கும் நமது பிள்ளைகளுக்கு நவீன உற்பத்தி தொழிலை (Manufacturing Business) இலக்காக கொண்ட அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கல்வியை (Science &Technology Research) முன்னிறுத்துங்கள்.
அடுத்த 20 ஆண்டுகளில் கோவை முஸ்லிம் பிள்ளைகள் ஆராய்ச்சிக் கல்வியிலும் உற்பத்தித் தொழிலிலும் முன்னிலை வகிக்க வேண்டும் என்ற தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படையில் இயங்கும் சமுதாய அமைப்புகளால் மட்டுமே கோவை மக்களுக்கு நம்பிக்கையளிக்க முடியும். நல்லது செய்ய முடியும்.
————————————–
” நெருக்கடிகளுக்கு நிலையான தீர்வு” என்ற தலைப்பில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் முஸ்லிம்களின் கல்வி சமூக பொருளாதார மேம்பாட்டு கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது.






