Admin
November 18, 2020
திறமையான குடித்தனம்
குடும்பத்தில் கணவன் மனைவி பிள்ளைகள் மூத்தவர்கள் இவர்களின் இயல்பு குணங்கள் – உடல்நிலை குறித்த அடிப்படை உளவியலை அறிந்து கொள்வது…..
நமது மண்ணில் கிடைக்கும் காய்கறி கீரை பழங்கள் பால் பொருட்கள் இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களில் இறைவன் பொதித்து வைத்துள்ள ஊட்டச்சத்து இரகசியங்களை அறிந்து கொள்வது…..
சமயலறையில் அன்றாடம் பயன்படுத்தும் இஞ்சி பூண்டு சீரகம் மிளகு உள்ளிட்ட மூலப் பொருட்களில் மறைந்துள்ள இறைவனின் மருத்துவ இரகசியங்களை ஆய்வு செய்து அறிந்து கொள்வது….
உணவு தயாரிக்க பயன்படுத்தும் உலோகப் பாத்திரங்கள் மற்றும் மின்சார சாதனங்களின் இரசாயன விளைவுகளை அறிந்து கொள்வது…..
நோன்பு,உணவின் அளவு,உண்ணும் முறை இவற்றை பெருமானார் காட்டித்தந்த வகையிலும், உணவு உட்கொள்ளும் காலம் நேரத்தை தமிழ் சித்தர்கள் காட்டித்தந்த முறையிலும் அறிந்து கொள்வது…..
வீடு மற்றும் சமையலறையின் அமைப்பு காற்றோட்டம் சூரிய வெளிச்சம் போன்ற இயற்கையின் பலன்களையும் அது இல்லை என்றால் ஏற்படும் விளைவுகளையும் அறிவியல் பூர்வமாக அறிந்து கொள்வது…..
இவை அனைத்தும் ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் மனிதனாகப் பிறந்தவன் பெற்றிருக்க வேண்டிய அடிப்படையான கல்வி.
இயற்கையாகவே இந்த விவரங்களை வெளிப்படுத்தும் பெண்ணை ” திறமையான குடித்தனக்காரி” என்று கிராமங்களில் சான்றிதழ் வழங்குவார்கள்.
இன்றைய படித்த (?) பெற்றோர் இந்த கல்வியை கற்று குறைந்தது 35 விழுக்காடு நடைமுறைப் படுத்தினாலும் போதும்.எந்த வைரஸும் தாக்காது. குடும்பத்தில் நோயின் வேதனைகள் இருக்காது.நமது செல்வம் பறிபோகாது.
மகத்தான இந்த அறிவை பெறுவதற்கு இந்த ஊரடங்கு காலத்தை பயன்படுத்திக் கொள்வோம்.