Admin
November 18, 2020
நமது சிந்தனைகளை செப்பனிடும் காலம் இது
இனிவரும் காலங்களில் புதிய புதிய பெயர்களில் வைரஸ்கள் படையெடுத்து வரப்போகின்றன என்பது உறுதி. இந்த வைரஸ் படையெடுப்பிற்கு பின்னால் முழு உலகையும் தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் வெறிபிடித்த சிந்தனை இருக்கிறது என்பதை மறுத்துவிட இயலாது.உலக அரசியலை வரலாற்று பின்புலத்தோடு சிந்திப்பவர்கள் இதை எளிதாக உணர்ந்து கொள்வார்கள்.
உயிர் அச்சம் நிறைந்த இன்றைய சூழலில் முஸ்லிம் உம்மத்திற்கு பெரும் படிப்பினைகள் உள்ளன.
” எந்த ஒரு சமுதாயத்தவரும் தம் நிலையைத் தாமே மாற்றிக்கொள்ளாத வரை, நிச்சயமாக இறைவன் அவர்களை மாற்றுவதில்லை.’ {அல்குர்ஆன் 13 : 11}
அறிவியல் ஆய்வுகளும் தொழில்நுட்ப மேன்மையும் உம்மத்தின் கைகளில் இல்லாமல் போனால்……உலகில் நடைபெறும் சமூக அரசியல் சூழ்ச்சிகளை பகுப்பாய்வு செய்து புரிந்து கொள்ளும் தன்மை இல்லாமல் போனால்…..நம்மீது கட்டாய சட்டமாக்கப்பட்டுள்ள மார்க்க கடமைகளை கூட மற்றவர்களால் எளிதாக தடுத்துவிட முடியும் என்பதற்கு இன்றைய நிலையை விட வேறு சான்றுகள் தேவையில்லை.
இனி என்ன செய்ய வேண்டும்….?
இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய உயிரியல் (Biology) பிரிவு மாணவர்களிடம் மனிதகுலம் சந்திக்கும் இன்றைய ஆபத்தான நிலையை அவர்களுக்கு தெளிவாக உணர்த்துங்கள். அவர்களை Microbiology,Biochemistry, Botany, Zoology,Genetics போன்ற படிப்புகளில் ஒன்றை தேர்வு செய்து 5 ஆண்டுகள் பட்டமேற்படிப்பு வரை (PG) படித்து பிறகு ஆய்வு படிப்பை மேற்கொள்ள வலியுறுத்துங்கள்.
” வானங்களிலுள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தையும் தன் அருளால் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான். அதில் சிந்திக்கும் சமூகத்தாருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் உள்ளன ” (அல் குர்ஆன் 45:13)
…….என்ற அல்லாஹ்வுடைய சத்திய வாக்கின் மீது உங்கள் பிள்ளைகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்துங்கள்.அல்லாஹ் நமக்கு வசப்படுத்தி தந்திருக்கும் இந்த வானம் பூமி எல்லையை தாண்டி வேறு எங்கிருந்தும் எந்த வைரஸ்களும் நம்மை வந்தடையப் போவதில்லை.
அல்லாஹ்விடம் இப்படி கேட்க பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள்….
” இறைவா….. உயிரியல் துறையில் மனிதகுலத்திற்கு இதுநாள் வரை நீ வழங்கிய அறிவை காட்டிலும் கூடுதல் அறிவை எனக்கு வழங்கு” என்று மன்றாடி கேட்கச் சொல்லுங்கள்.
ஆழமான பிரார்த்தனைகளும் தளராத ஆய்வு முயற்சிகளும் இணைந்து இடைவிடாமல் நடைபெற்றால் இன்ஷா அல்லாஹ்…. அடுத்த 10 – 20 ஆண்டுகளில் உயிரியல் உள்ளிட்ட அதுசார்பு துறைகளில் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் உம்மத்திலிருந்து உருவாவார்கள்.
எதிர்காலத்தில் எவ்வளவு வீரியமான வைரஸ்கள் உருவெடுத்து வந்தாலும் அல்லது உருவாக்கப்பட்டாலும் அவற்றின் வீச்சையும் வேகத்தையும் தடுத்து நிறுத்தும் ஆற்றலை உம்மத்தின் பிள்ளைகள் பெற்றிருப்பார்கள். மனிதகுலம் சுரண்டப்படுவதை தடுத்து நிறுத்துவார்கள்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உம்மத்திற்கு வாக்களித்துள்ளான்.
இந்த அண்டமே அழிந்து போனாலும் அவனது வாக்கு அழியாது.
அது பொய்க்காது.