Admin
November 18, 2020
நமது சிந்தனைக்குத் தீனி யாரிடமிருந்து வருகிறது.
இளைஞர்கள் எதை சிந்திக்க வேண்டும் எதை விவாதிக்க வேண்டும் எதை உண்ண உடுத்த உபயோகப்படுத்த வேண்டும் என்பதை நமது எதிரிகள் முடிவு செய்ய அனுமதித்தால் இப்போது போல எப்போதும் சமூகம் பலவீனப்பட்டு தான் நிற்கும்.
உம்மத்திற்கு எதிராக யூதர்கள் உலகம் முழுவதும் இதை திட்டமிட்டு செய்கிறார்கள். இந்தியாவிலும் இலங்கையிலும் சங்கிகள் செய்கிறார்கள்.
இளைய தலைமுறைக்கு பயனுள்ள வழிகாட்டல் இருந்தால் பயனுள்ளவற்றில் கட்டுக்கடங்காத வேகத்தை காட்டுவார்கள் அது உம்மத்தை குறுகிய காலத்தில் வளர்ச்சியின் உச்சிக்கு கொண்டு போகும்.இது சமூகத்தின் முன்னோடிகள் செய்ய வேண்டிய அவசியமான வேலை.பன்முகச் சமூகத்தில் வாழும் நாம் இளைய தலைமுறையை இஸ்லாமிய கலாச்சார பண்பியல் வட்டத்திற்குள் வைத்திருக்கும் மிக முக்கியமான கலை இது.
மதம் அரசியல் போன்ற உணர்ச்சிப் பூர்வமான விவகாரங்களில் நிதானம் குறைவாக காணப்படும் வயதில் இளைஞர்கள் கூர்தீட்டி விடப்பட்டால் சொந்த தாய் தந்தை சமூகம் என்றுகூட பார்க்காமல் குத்திக் கிழிப்பதில் மூர்த்தனத்தை காட்டுவார்கள்.
ஆக மொத்தம் குறிப்பிட்ட வயது வரை கட்டுக்கடங்காத வேகமும் மூர்க்கத்தனமும் மனித இயல்பாக இருக்கிறது. ஊரின் பொது காரியங்களில் இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டால் முதல்வேலையாக ஊரின் ஒற்றுமைக்கு தீ வைப்பார்கள் என்ற எதார்த்தத்தை மூத்தவர்கள் உணரவேண்டும்