நாளைய உலகம் நமதாகட்டும் – மஸ்ஜிதுத் தவ்ஹீத், திருச்சி
ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH) மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் இணைந்து நடத்திய “நாளைய உலகம் நமதாகட்டும்” என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, திருச்சி ஏர்போர்ட் அருகிலுள்ள மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசலில், 28.05.2022 (சனிக்கிழமை) அன்று காலை நடைபெற்றது.
JAQH அமைப்பின் திருச்சி மாவட்ட தலைவர், பேரா.M.P.முஹம்மத்., M.A.,M.Phil அவர்கள் அறிமுக உரை மற்றும் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.
JAQH அமைப்பின் மாநில பொதுச் செயலாளர், ஜனாப்.P.நூர் முஹம்மது.,B.Com., அவர்கள் தலைமை உரை ஆற்றினார்கள். இஸ்லாமிய வரலாற்றின் தரவுகளை முன்வைத்து கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்கள். மூத்த கல்வியாளர் அல்ஹுதா நிறுவனங்களின் தலைவர், ஜனாப். T.C அப்துல் மஜீத் அவர்கள் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தார்கள்.
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் நெறியாளர், ஜனாப்.கா.பைசல் அஹமது அவர்கள், “எது கல்வி? அது ஏன் அவசியம்?” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் உயர்கல்வி ஆலோசகர், பேராசிரியர், V.R.அப்துர்ரஹ்மான்.,M.E.,M.A., அவர்கள், “என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?” என்ற தலைப்பில் PowerPoint Presentation மூலம் வகுப்பு நடத்தினார்கள்.
அதன் பிறகு, கேள்வி பதில் நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
JAQH அமைப்பின் மாநில செயலாளர், ஜனாப்.பி.பிரேம் நஸிர் D.M.E., அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.மேலும், இது போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்துவதன் அவசியத்தையும் குறிப்பிட்டார்கள்.
நூற்றுக்கும் அதிகமான மாணவ மாணவியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சி மிகச்சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அல்ஹம்துலில்லாஹ்.