நாளைய உலகம் நமதாகட்டும் – வக்ஃபு வாரிய கல்லூரி வளாகம், மதுரை
மதுரை எகானமிக் சேம்பர் ( MEC) மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் இணைந்து நடத்திய ” நாளைய உலகம் நமதாகட்டும் ” உம்மத்திற்கான உயர்கல்வி இலக்கு பயிற்றுவிக்கும் நிகழ்ச்சி மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி வளாகத்தில் 19.06.22 ஞாயிறு காலை நடைபெற்றது.
துவக்கமாக கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் காணொளி காட்சி மூலம் ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கத்தின் வட்டார செயலாளர் ஜனாப்.A.K.ஜமான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் உயர்கல்வி ஆலோசகர் பேரா.M.முஹம்மது இஸ்மாயில் M.E.,M.A.,LLB அவர்கள் என்ன படிக்கலாம் ? எது நம் இலக்கு ? என்ற தலைப்பில் PowerPoint Presentation மூலம் விரிவான வழிகாட்டுதல் வழங்கினார்கள்.
பின்னர் மாணவ மாணவிகளின் உயர்கல்வி சார்ந்த சந்தேகங்களுக்கு விரிவான விளக்கங்கள் தரப்பட்டது.
ஜமாத்தார்களும் மாணவ மாணவிகளும்
பெரும் திரளாக கலந்து கொண்ட இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை Madurai Economic Chamber நிர்வாகிகள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.