நாளைய உலகம் நமதாகட்டும் – அதிராம்பட்டினம், தஞ்சாவூர்
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் நடத்திய “நாளைய உலகம் நமதாகட்டும்” என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில், 26.06.2022 (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்றது.
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் அதிராம்பட்டினம் பொறுப்பாளர் ஜனாப் N.முஹம்மது மாலிக் அவர்கள் அறிமுக உரை மற்றும் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் நிறுவனர், சகோதரர் CMN சலீம் அவர்கள், “முஸ்லிம்களின் கல்வி மேம்பாடு” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் உயர்கல்வி ஆலோசகர், பேராசிரியர், V.R.அப்துர்ரஹ்மான்.,M.E.,M.A., அவர்கள், “என்ன படிக்கலாம்? எது நம் இலக்கு?” என்ற தலைப்பில் PowerPoint Presentation மூலம் வகுப்பு நடத்தினார்கள்.
அதன் பிறகு, கேள்வி பதில் நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் அதிராம்பட்டினம் பொறுப்பாளர் ஜனாப் N.முஹம்மது மாலிக் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள். மேலும், இது போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்துவதன் அவசியத்தையும் குறிப்பிட்டார்கள்.
பல மாணவ மாணவியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சி மிகச்சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அல்ஹம்துலில்லாஹ்.