ஊரடங்கு என்பது மக்கள் கூட்டமாக கூடுவதை தான் தடுக்கிறது.வீடுகளில் தோட்டங்களில் உழைப்பதை தடுக்கவில்லை. அப்படி தடுத்தால் அது அரசு செய்யும் மிகப்பெரும் பிழையாகப் போகும்.
வயற்காடு,தோட்டம்,தென்னந்தோப்புகள் ஆகியவற்றின் அருகிலேயே வாழும் வாய்ப்பை பெற்ற மக்கள் இந்த ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதிகமானோர் பயன்படுத்த துவங்கியுள்ள்னர்.
வாழை,காய்கறிகள்,கீரைகள், நாட்டுக்கோழி போன்ற குறுகிய கால உணவுப் பயிர்களை இடம் சூழலுக்கேற்ப உற்பத்தி செய்வதில் முனைப்பு காட்டலாம். ஒரு துண்டு நிலம் இருந்தாலும் அதை உபயோகப் படுத்துங்கள்.
ஒருவேளை ஊரடங்கு நீடிக்கப்பட்டு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டால் உங்களது குடும்பம் பிள்ளைகளோடு சுற்றியுள்ள மக்களும் பலமாதங்களுக்கு தாக்குப்பிடித்துக் கொள்வார்கள்.
வளரும் பிள்ளைகளை இதில் ஈடுபடுத்த வேண்டும். அது வணிக நோக்கத்தில் அல்ல .பசியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இறைவன் வழங்கிய இயற்கையான ஏற்பாடு என்பதால்.