மாநிலம் தழுவிய உயர்கல்வி மாநாடு – 2023
” நீங்களும் உங்களது குடும்பமும் உங்கள் சந்ததிகளும் ஆன்மிகத்துடன் அறிவாற்றல் பெற வேண்டும், அதன் மூலம் இந்த உம்மத்துக்கு பாதுகாப்பும் கண்ணியமும் அதிகரிக்க வேண்டும். இதற்கான எல்லா உதவிகளையும் வழிகாட்டுதலையும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் எப்போதும் செய்யும் ” இந்த நம்பிக்கையை மாணவ மாணவிகள் பெற்றோர்களுக்கு விதைப்பது தான் இந்த உயர்கல்வி மாநாட்டின் நோக்கமாக இருந்தது.
மாணவ மாணவிகள் தனித்தனியாக விளக்கம் பெறுவதற்கு வசதியாக ஆலோசனை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. எந்த துறை குறித்தும் கேட்டு தெளிவு பெறும் வகையில் வல்லுநர்கள் குழு அந்த அரங்கில் அமர்ந்து ஆலோசனை வழங்கினர்.
சட்டம் / ஆட்சிப்பணி / ஆயுஷ் மருத்துவம் / உயிரியல் / ஆகிய துறைகளில் ஆராய்ச்சிக் கல்வியை (Ph.D) முன்னெடுக்கும் ஆதரவற்ற (எத்தீம்) ஏழை மாணவ மாணவிகளுக்கு அவர்களின் கல்வி காலம் முழுமைக்கும் பொறுப்பேற்கும் அரங்கும் அமைக்கப்பட்டிருந்தது.