மாநிலம் தழுவிய உயர்கல்வி மாநாடு – 2023
அப்பாஸிய கலீஃபா ஹாருன் அல் ரஷீத் அவர்களால் 9 ஆம் நூற்றாண்டில் துவங்கப்பட்ட உலகப்புகழ் பெற்ற ” பைத்துல் ஹிக்மா ” என்ற உயர்கல்வி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் வரலாற்றுச் சாதனைகளை திருச்சியில் நடைபெற்ற உயர்கல்வி மாநாட்டில் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி மாணவிகள் நாடகம் மூலம் காட்சிப் படுத்தினர்.
இஸ்லாமிய வரலாற்றில் கற்றறிந்த அறிஞர் (ஆலிம்) என்றால் அது மார்க்க கல்வியின் நிழலில் உலகின் அனைத்து பயனுள்ள அறிவையும் பெற்ற பல்துறை விற்பன்னர் என்பது தான் அடையாளமாக இருந்துள்ளது என்பதை வரலாறு நமக்கு சான்றளிக்கிறது.
வரலாற்றின் மத்தியகாலத்தில் உலகின் அறிவுத்துறைக்கும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் முஸ்லிம்கள் ஆற்றியுள்ள பங்களிப்புகளை கவனத்தில் கொள்ளாமல் இன்றைய பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் உயர்கல்வியை தேர்வு செய்வது கூடாது.
அது ஈமானிய இலக்கு இல்லாத இன்றைய முதலாளித்துவத்தின் ஊழியர்களாக காகிதத்தில் பட்டங்களை சுமக்கும் வெறும் பட்டதாரிகளாக அந்த பிள்ளைகளை மாற்றிவிடும் பேராபத்து இருக்கிறது.