முஸ்லிம் விஞ்ஞானி 2040 – திருப்பூர்
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் மற்றும் JAQH YOUTH MOVEMENT (JYM) சார்பாக “முஸ்லிம் விஞ்ஞானி -2040” நிகழ்ச்சி 05.03.2023 அன்று நடைபெற்றது.
நிகழ்வின் துவக்கமாக தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் உயர்கல்வி ஆலோசகர் பேரா.M.முஹம்மது இஸ்மாயில் M.E,M.A .,LLB., அவர்கள் ஆய்வுக் கல்வியின் அவசியம் குறித்தும் , அடுத்த 20 ஆண்டுகளில் முஸ்லிம் சமூகத்தில் ஆய்வாளர்களும் விஞ்ஞானிகளும் உருவாக வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும், இஸ்லாமிய வரலாற்றில் வாழ்ந்த அறிவுஜீவிகள் குறித்தும்
உயிரியல் துறையில் (Life Science ) ஆய்வுக் கல்விக்கான சர்வதேச வாய்ப்புகள் குறித்தும் விரிவாக விளக்கினார்கள்.
அதைத் தொடர்ந்து தொழில் நுட்பத் துறையில் (Technology) அடுத்த 20 ஆண்டுகளில் ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்தும் அதில் நாம் பங்கெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் அறிவியல் தொழில்நுட்பத் துறை ஆராய்ச்சியாளர் சகோ.R.முஹம்மது அனஸ் B.E.,B.Sc .,அவர்கள் விரிவாக விளக்கினார்கள்.
இறுதியில் ஆய்வுக் கல்வி குறித்த மாணவ மாணவிகளின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது.
இந்த மாணவர்கள் கல்லூரியில் சேர்வது முதல் ஆராய்ச்சியாளர் ஆகும் வரை அவர்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சியளித்து வழிகாட்டும் பொறுப்பை தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் ஏற்றுள்ளது.
நிகழ்விற்கான ஏற்பாடுகளை
ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ், திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் மிகச் சிறப்பாக செய்திருந்தினர்.