முஸ்லிம் விஞ்ஞானி- 2040, பல்லாவரம் , சென்னை
அல்ஹம்துலில்லாஹ்… பல்லாவரம் வட்டார மஹல்லா ஜமாத் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் இணைந்து நடத்திய ” முஸ்லிம் விஞ்ஞானி -2040″ நிகழ்ச்சி பல்லாவரம் ஜமால் பேலஸ் அரங்கில் நேற்று (04.10.22) நடைபெற்றது.
பல்லாவரம் தாருல் ஹுப்பால் ஹுசைனிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலவி ஆதம் ஸபியுல்லாஹ் இல்ஹாமி அவர்களின் வரவேற்புரையுடன் துவங்கிய இந்நிகழ்வில்,
துவக்கமாக தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் உயர்கல்வி ஆலோசகர் பேரா.M.முஹம்மது இஸ்மாயில் M.E.,LLB., அவர்கள் ஆய்வுக் கல்வியின் அவசியம் குறித்தும் , அடுத்த 20 ஆண்டுகளில் முஸ்லிம் சமூகத்தில் ஆய்வாளர்களும் விஞ்ஞானிகளும் உருவாக வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து விரிவாக விளக்கினார்கள்.
அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் உயிரியல் பிரிவு ஆலோசகர் பேரா.அப்துல் பாசித் M.Sc (Ph.D) அவர்கள் உயிரியல் துறையில் (Life Science ) ஆய்வுக் கல்விக்கான வாய்ப்புகள் குறித்து PowerPoint மூலம் வகுப்பெடுத்தார்கள்.
இறுதியாக தொழில் நுட்பத் துறையில் (Technology) அடுத்த 20 ஆண்டுகளில் ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்தும் அதில் நாம் பங்கெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் அறிவியல் தொழில்நுட்பத் துறை ஆராய்ச்சியாளர் சகோ.R.முஹம்மது அனஸ் B.E.,B.Sc .,அவர்கள் விரிவாக விளக்கினார்கள்.
நிகழ்வின் இறுதியில் ஆய்வுக் கல்வி குறித்த மாணவ மாணவிகளின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது.
நிகழ்விற்கான ஏற்பாடுகளை பல்லாவரம் வட்டார மஹல்லா ஜமாத் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மிகச் சிறப்பாக செய்திருந்தினர்.