முஹல்லா மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் உயர்வான இலக்கை முன்னிறுத்தி தலைமைத்துவ பயிற்சிகள் அளிப்பதினூடாக எதிர்காலத்தில் கல்வி சமூக பொருளாதார அரசியல் தளங்களில் ஆகச்சிறந்த ஆளுமைகளை உருவாக்க முடியும்.
முஹல்லா மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் உயர்வான இலக்கை முன்னிறுத்தி தலைமைத்துவ பயிற்சிகள் அளிப்பதினூடாக எதிர்காலத்தில் கல்வி சமூக பொருளாதார அரசியல் தளங்களில் ஆகச்சிறந்த ஆளுமைகளை உருவாக்க முடியும்.
மனித இனத்தை வறுமையிலிருந்தும் போர்களிலிருந்தும் பாதுகாத்து பூமியில் அமைதியை நிலைபெறச்செய்யும் நுண்ணறிவுமிக்க அரசியல் ஞானிகளாக நீங்கள் உருவாக வேண்டும்.
மனிதர்களை நோய்களிலிருந்து பாதுகாத்திடும் எளிய மருந்துகளை கண்டறியும் ஆகச்சிறந்த உயிரியல் விஞ்ஞானிகளாக நீங்கள் உருவாக வேண்டும்.
உலகம் முழுவதும் அநீதம் இழைக்கப்படும் மக்களுக்கு நீதி நபியின் வழியில் ஆதரவாக சட்டப் போராட்டங்களை மேற்கொள்ளும் சர்வதேச வழக்கறிஞர்களாக நீங்கள் உருவாக வேண்டும்.
மகத்தான தொழில் சாம்ராஜ்யங்களை கட்டமைத்து பல்லாயிரம் பேருக்கு வேலை கொடுக்கும் பெரும் தொழிலதிபர்களாக நீங்கள் உருவாக வேண்டும்.
இது ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மஹல்லா மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தொடர்ச்சியாக பயிற்றுவிக்க வேண்டிய உயர்ந்த இலக்குடன் கூடிய தலைமைத்துவ பாடம். பசுமரத்தாணி போல ஆயுள் முழுவதும் அவர்களின் மனதில் ஆழமாக பதிவாகியிருக்கும்.
இரண்டு கல்வியிலும் தேர்ச்சியுடைய, ஒட்டுமொத்த உம்மத்தின் மீதும் அன்பு செலுத்தும், தஸவ்வுஃப் (அகச் சுத்திகரிப்பு) கலையில் ஆழமான பயிற்சிகளுடைய ஆலிம்கள் தான் இந்த தலைமைத்துவ பயிற்சிகளை அளிப்பதற்கு தகுதியுடைவர்கள்.
ஆலிம்களை உளமார கண்ணியப்படுத்தும் முஸ்லிம் சமூகம் உருவாக வேண்டும். அதற்கு இதுபோன்ற உயர்ந்த இலக்கை சமூகத்தின் இளைஞர்களுக்கு அர்ப்பணிப்புடன் பயிற்றுவிக்கும் இளம் ஆலிம்கள் உருவாக வேண்டும்.
இந்த இரண்டு முயற்சிகளும் ஈகோ இல்லாமல் இணைவதற்கு அல்லாஹ்வின் பரக்கத்துக்காக அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்.
-CMN SALEEM