மேனிலை மாணவர்களுக்கான இலக்கு நிர்ணயிக்கும் சிறப்பு வகுப்பு
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளியின் உயர்நிலை மேனிலை மாணவர்களுக்கான இலக்கு நிர்ணயிக்கும் சிறப்பு வகுப்பு நடைபெற்றது.
இமாம் ஷாஃபி பள்ளி நிர்வாகமும் வழக்கறிஞர் முகம்மது தம்பி அவர்களும் இந்நிகழ்வை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
ஏதாவது ஒரு பட்டம் பெற்று அரபுநாடுகளுக்கு வேலைதேடி ஓடும் நிலையை மாற்றி தொலைநோக்காக சிந்திக்க வேண்டிய கட்டாயம் இருப்பதை காட்சிப்பட தரவுகளுடன் பகிர்ந்து கொண்டோம்.
அரபுநாடுகளின் கார்ப்பரேட் கம்பெனி வேலையை விட அங்கேயுள்ள அரசு பல்கலைக்கழகங்களில் உயிரியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்களுக்கு மிகுந்த கண்ணியமும் அதிகப்படியான உதவித்தொகையும் எக்சக்கமான சலுகைகளும் வழங்கப்படுவதை நுட்பமாக கவனப்படுத்தினோம்.
மக்கள் தொகை குறைந்து போன ஐரோப்பிய நாடுகளில் ஆராய்ச்சிக் கல்வியை முன்னெடுப்பவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுவதையும் மாணவர்களுக்கு கவனப்படுத்தினோம்.
அதிரையின் இளம் தலைமுறை உயிரியல் வேதியியல் ஆராய்ச்சியாளர்களாக, புதிய தொழில்நுட்பங்களின் கண்டுபிடிப்பாளர்களாக, உற்பத்தித் தொழில் முனைவோராக,சர்வதேச வழக்கறிஞர்களாக உருவாகும் வழிமுறையை மாணவர்களின் உள்ளத்தில் விதைத்தோம்.
காலையில் மாணவர்களை ஊக்கப்படுத்தியது மதியம் பள்ளியின் ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தது மாலையில் பெற்றோர்களுக்கு பொறுப்புகளை நினைவுபடுத்தியது என்று நாள் முழுவதும் மூன்று அத்யாவசியமான நிகழ்வுகளில் உரைநிகழ்த்தியுள்ளேன்.