வணிக சாம்ராஜியம் – இரண்டு நாள் பயிலரங்கம்
வணிக சாம்ராஜ்யங்களை கட்டமைக்கும் செயல் திட்டத்தை இஸ்லாமிய அறிவு மரபில் பயிற்றுவிக்கும் இரண்டுநாள் பயிலரங்கம் பைத்துல் ஹிக்மாவில் செப்.17,18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
பொருள் வாங்கி விற்கும் வியாபார முறைகள் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகின்றன.உற்பத்தித் தொழில் (Manufacturing), ஆன்லைன் வர்த்தகம் (E-commerce),ஏற்றுமதி உள்ளிட்டவை பெரும்பொருளீட்டும் தொழில்களாக வளர்ச்சியடைந்து வருகின்றன.
மிகச்சிறப்பாக இயங்கும் முஸ்லிம்களின் மரபு வியாபார நிறுவனங்கள் ஒரு தலைமுறையைத் தாண்டி நிற்பது அரிதாகி விட்டது. ஆனால் பல தலைமுறைகளைத் தாண்டி நிற்கும் உற்பத்தி சார்ந்த குடும்பத் தொழில்கள் நம் கண்முன் கம்பீரமாக காட்சியளிக்கின்றன.
வணிக சாம்ராஜ்யங்களை கட்டமைக்கும் இஸ்லாமிய வணிக உளவியலையும்,அதிக பரக்கத்தை குவிக்கும் உற்பத்தி சார்ந்த புதிய தொழில்களையும்,முத்திரை (Brand) உருவாக்கும் நுட்பத்தையும்,தொழில் நிறுவனங்களுக்கான அரசின் உதவிகளையும் இந்த இரண்டு நாள் பயிலரங்கில் கற்றுக்கொள்ளலாம்.
மேலும் திறமையான தொழில் பயிற்சியாளராக (Business Coach) உருவாகி உம்மத்துக்கு வழிகாட்டும் வேட்கையுடைய ஆலிம்களையும் பட்டதாரிகளையும் இந்த பயிலரங்கில் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.