10 ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றதற்கு பாராட்டு விழா
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் புதுச்சேரி கடுவனுரில் உருவாக்கப்பட்டு வரும் பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனம் மார்க்கக் கல்வி படித்தவர்களை சட்டத் துறைக்கும் அரசுப் பணிகளுக்கும் உருவாக்கும் துல்லியமான இலக்குடன் இயங்கி வருகிறது.
பைத்துல் ஹிக்மாவின் முதல் நிறுவனமான 2018 இல் துவங்கப்பட்ட ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியில் 5 ஆம் ஜும்ரா ஓதிய மாணவர்கள் அனைவரும் 10 ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றதற்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த பாராட்டு விழாவுடன் முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி வளர்ச்சி குறித்த சிறப்பு பயிலரங்கமும் நடைபெற்றது.
நம் பிள்ளைக்கு கிடைக்கும் தரமான உயர்கல்வியும் அதன் மூலம் கிடைக்கப்பெறும் வளங்களும் உம்மத்தின் எல்லாப் பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற வேட்கையோடு விவரம் அறிந்த பெற்றோர்கள் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே ஒரு சமூகமாக முஸ்லிம்கள் வளர்ச்சியடைய முடியும் என்ற தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் கருத்து வலிமையாக முன்வைக்கப்பட்டது.