11th இஸ்லாமியப் பள்ளிக்கூடம் துவங்குவதற்கான மூன்று நாள் பயிலரங்கம்
இஸ்லாமியப் பள்ளிக்கூடம் துவங்குவதற்கான மூன்று நாள் பயிலரங்கம் அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
பெண் கல்வியாளர்ளை உருவாக்கும் இலக்குடன் இயங்கும் இக்கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகளும்,இஸ்லாமியப் பள்ளிக்கூடம் துவங்கும் ஆர்வமுடையவர்களும், இரண்டு கல்வியும் இணைந்த அரபு மதரஸாக்களை உருவாக்கும் முயற்சியில் இருக்கும் உலமாக்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
தமிழக முஸ்லிம் சமூகத்தின் நிலையான கல்வி வளர்ச்சிக்கு இந்த மூன்றுநாள் பயிலரங்கம் கடந்த 11 ஆண்டுகளாக தொடர்ந்து விதைத்துக் கொண்டே இருக்கிறது.
அல்ஹம்துலில்லாஹ்.