12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிலரங்கம் – துவங்கியது
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 14 நாட்கள் பயிலரங்கம் புதுச்சேரி பைத்துல் ஹிக்மாவில் ஞாயிறு அன்று துவங்கியது.
கல்லூரி கல்வியின் காலம் ஆராய்ச்சிக் கல்வி (Ph.D) வரை என்பது முஸ்லிம்களின் கலாச்சாரமாக உருவாக வேண்டும்.
கல்வித் துறையிலும் மத்திய மாநில அரசுகளின் அதிகாரமிக்க பொறுப்புகளிலும் அமர்வதே கலை மற்றும் வர்த்தகப் பிரிவு மாணவர்களின் இலக்கு.
சர்வதேச அறிவியல் நிறுவனங்களில் ஆராய்ச்சியாளர்களாக ஆளுமை செலுத்துவதே இயற்கை அறிவியல் பிரிவு மாணவர்களின் இலக்கு.
இந்த இலக்கை அடைய மாணவர்களின் அறிவு ஆன்மா உடல் இந்த மூன்றையும் ஆன்மிகத்தினூடாக பயிற்றுவிப்பதே இந்த பயிலரங்கத்தின் செயல்திட்டம்.