14 நாள் பயிலரங்கம் நிறைவுற்றது
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் ஏற்பாடு செய்திருந்த 14 நாள் பயிலரங்கம் நிறைவுற்றது.
உயிரியல் துறையில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு உணவு உற்பத்தியில் சாதிப்பதும், அதிதீவிர நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்து உயிரினங்களை காப்பதும் தான் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான இலக்கு.
இந்திய கல்வித் துறையிலும், சர்வதேச அளவில் பொதுக் கொள்கை (Public Policy) வகுப்பாளர்களாகவும், சட்டத் துறையின் சர்வதேச முன்னவர்களாகவும் உருவாது தான் கலைப்பிரிவு மாணவர்களுக்கான வாழ்நாள் இலக்கு.
முஸ்லிம் பிள்ளைகள் இனி வெறும் பட்டதாரிகளோ அல்லது மாதஊதிய பணியாளர்களோ அல்ல.அவர்கள் மனித குலத்தின் ஆகச்சிறந்த ஆராய்ச்சியாளர்கள்.
இந்த மாணவர்களை கல்லூரியில் சேர்த்து ஆராய்ச்சிப் படிப்பு வரை அவர்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சியளித்து வழிகாட்டும் பொறுப்பையும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் ஏற்றுள்ளது.
-‐————————————–
அட உன்னத்தான் நம்புறேன் நல்லவா
உன்னால மாறுதல் வந்திடும் அல்லவா.