Admin
November 18, 2020
அதிகம் சம்பாதிக்கும் வழியை கண்டறிவோம்.
இன்ஷா அல்லாஹ்…..இன்னும் சில நாட்களில் இந்த கொரோனா கலவரம் முடிவுக்கு வர இருக்கிறது. இயல்பு நிலையை எதிர்நோக்கி காத்திருக்கும் நாம் அடுத்து செய்ய வேண்டிய காரியங்களை திட்டமிடுவது பொருத்தமாக இருக்கும்.
மார்க்கம் அனுமதித்த வகையிலான பொருளீட்டும் முறைமை ஒரு மனிதனுக்கு ஒரு சமூகத்திற்கு கண்ணுக்குத் தெரிந்த தெரியாத அதிகாரங்களை பல வடிவங்களில் கொண்டு வந்து குவிக்கும்.
முதலாளித்துவ சமூக அரசியல் அமைப்பில் இந்த காகிதப் பணம் இன்றைய உலகின் வலிமையான ஆயுதமாக பயன் படுத்தப்படுகிறது.
அதனால் தான் பணத்தை வைத்து விளையாடும் உள்ளூர் வட்டிக்கடைகள் துவங்கி உலக வங்கிகள், நிதிநிறுவனங்கள், பங்கு வர்த்தகங்கள், அதிகமான பணத்தை வைத்திருக்கும் நாடுகள் இவை அனைத்தும் உலகின் அதிகார மய்யங்களாக இருக்கின்றன.
அபரிமிதமான இந்த பண வலிமைக்கு முன்னால் இடைநிலை மற்றும் ஏழை நாடுகள் அடங்கி ஒடுங்கி நிற்க வேண்டிய அவல நிலை உண்டாகியுள்ளது. இவையெல்லாம் கடந்த ஒரு நூற்றாண்டில் ஏற்பட்ட சீரழிவுகள்.
சரி விசயத்திற்கு வருவோம்.
அதிகப்படியான பணத்தை அனுமதிக்கப்பட்ட வழியில் சம்பாதிப்பதற்கு உம்மத்தின் ஆண் பெண் உள்ளிட்ட இளைய தலைமுறையை தயார் படுத்துவது தான் நெருக்கடியான இன்றைய காலத்தின் அடிப்படையான பணியாக இருக்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் வளைகுடா நாடுகள் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்காது. அதை மறந்து விடுங்கள். ஆனால் தொழில் வாய்ப்புகள் பெருகலாம்.
நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளா விட்டாலும் வணிகம் தான் இந்த உம்மத்தை உயர்த்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வரலாறு முழுவதும் நமக்கு வாழ்வு அளித்திருப்பதும் சமூக அதிகாரத்தை பெற்றுத் தந்ததும் வணிகம் தான்.
வணிகப் பாரம்பரியத்தை மீட்டெடுப்பதின் மூலம் மட்டுமே பொருளாதார நிலைத்தன்மையை அடைய முடியும்.
இன்ஷா அல்லாஹ்….இது குறித்து மேலும் பார்ப்போம்.