Admin
November 18, 2020
அச்சமும் அழுகையும் தீர்வை தராது.
அரசமைப்பு சட்டத்தை வடிவமைப்பு செய்த அரசியல் சாசன அவையில் (Constituent Assembly) இடம் பெற்றிருந்த ஒவ்வொருவருக்கும் ஒரு மறைமுகத் திட்டம் (Hidden Agenda) இருந்தது.
ஆனால் இந்தியாவின் அடையாளம் மதச்சார்பின்மையும் சமஉரிமையுமாக இருத்தல் வேண்டும் என்ற உயர்வான பிடிவாதத்தில் காந்தி நேரு அம்பேத்கர் ஆசாத் போன்ற தேசியத் தலைவர்கள் உறுதியாக இருந்த காரணத்தால் சாசன அவையில் இருந்த அனைவரும் தங்களது மறைமுக திட்டங்களில் சிலவற்றை மட்டும் விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
உலக ஜனநாயக அமைப்பில் உயர்வான அரசமைப்பு சட்டம் நடைமுறையில் உள்ள நம் நாட்டில் மதத்தை சாதியை கலாச்சாரத்தை காரணம் காட்டி ஒரு சமூகம் ஒதுக்கப்படுகிறது என்றல் அது ஒதுக்க முயற்சிப்பவர்களின் குற்றமல்ல.
ஆட்சி அமைக்கும் உரிமைகளும் உயர் அதிகாரத்தை பெறுவதற்கான வாய்ப்புகளும் குடிமக்கள் அனைவருக்கும் பொதுவானது என்பது அரசமைப்பு சட்டத்தின் மூலவிதி.
வெறுப்பு பிரச்சாரம் உருவாக்கிய பொதுப் புத்தியிலான கருத்துக்களை அரசு அதிகாரிகளும் ஊடகங்களும் கட்டுப்பாடின்றி வெளியிடுகின்றனர் என்றால்…
அவர்கள் அமர்ந்திருக்குக்கும் அதிகாரமிக்க இடங்களுக்கு நமது பிள்ளைகளை உருவாக்குவதும் நம்மோடு சேர்த்து மதச்சார்பின்மை மீது நம்பிக்கையுள்ள பிள்ளைகளை உருவாக்குவதும் தான் முடிவான தீர்வாக அமையும்.
முடிவான தீர்வை நோக்கி முன்னேறாமல் அதற்கான அதிகப்படியான தியாகங்களை செய்யாமல் அழுது புலம்புவது மட்டுமே தொடருமானால்…. ஆபத்தான காரியங்களை அலட்சியமாக கருதினார்கள் என்ற வரலாற்றுப் பழியை நம் பிள்ளைகள் நம்மீது சுமத்துவார்கள்.