வரலாறு முக்கியம் மக்கா…
1946 பஞ்ச காலத்தில் சவூதி அரேபியாவிற்கு நிதியுதவியளித்த தமிழர்கள் என்ற தகவலை வழக்கறிஞர் ஜெய்னுல்ஆபிதீன் அவர்களுடைய பதிவில் பார்த்தேன். ஆச்சரியமான தகவல்.
…………………………………………
சவூதி அரேபியாவை நிறுவியவரும் அன்றைய மன்னருமான மலிக் அப்துல் அஜீஸ் இப்னு சவூது அவர்கள் (இன்றைய மன்னர் சல்மான் அவர்களின் தந்தை) இந்த நிதியை பெற்றுக்கொண்டு நன்றி பாராட்டி தந்தி சொல்லியுள்ளார்கள் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.
பதில் கடிதம் ஏதேனும் வந்ததா என்று தெரியவில்லை. கொழும்பிலும் காயல்பட்டினத்திலும் தேடினால் கிடைக்கலாம்.
சவூதி அரசாங்க ஆவன காப்பகத்தில் நிச்சயம் இருக்கும். அப்படியில்லை யென்றாலும் கூட இந்த கடிதத்தை இப்போது மொழியாக்கம் செய்து முறைப்படி அனுப்பினால் பஞ்சகாலத்தில் தமிழ் முஸ்லிம்களின் பங்களிப்பை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து விடலாம்.இப்போதவது இதை செய்வது கட்டாயம். இது சாதாரன சம்பவம் அல்ல.
இந்த தகவலை தமிழகம் இலங்கையைச் சேர்ந்த மிக முக்கியமான இரண்டு அறிஞர்களுக்கு அனுப்பியுள்ளேன். முயற்சி செய்து பார்க்கலாம்.
ஒரு செய்தியை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
1912 இல் துருக்கி உதுமானிய அரசுக்கும் பால்கன் லீக் நாடுகளுக்கும் இடையே போர் நடைபெற்றது. போர் செலவினங்களுக்காக உலக முஸ்லிம்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அன்றும் கூட வறுமையில் வாடிய ரோஹிங்கிய முஸ்லிம் விவசாயிகள் ரங்கூனில் இருந்த உதுமானிய அரசின் தூதரகத்திற்கு சென்று 800 லிராஸ் வழங்கினார்கள்.போர் முடிந்து நிவாரணப் பணிகளுக்காக மீண்டும் கோரிக்கை வைத்தபோது ஏறக்குறைய 3000 லிரஸ் அளித்தனர்.
துருக்கியில் உதுமானிய அரசின் ஆட்சிமுறை முடிவுக்கு வந்து குடியரசு முறை ஏற்பட்டு 90 ஆண்டுகள் கடந்தப் பிறகும் கூட……
ரோஹிங்கிய முஸ்லிம்கள் பர்மிய ராணுவத்தால் துரத்தப்பட்ட போது துருக்கி அதிபர் எர்துகானின் மனைவி எம்னி அவர்கள் நேரடியாக சென்று அந்த மக்களுக்கு ஆறுதல் கூறினார்.” வறுமையிலும் எங்களுக்கு உதவிய மக்கள் இவர்கள்” என்று ஜனாதிபதி எர்துகான் குறிப்பிட்டார்.
பர்மிய அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கொண்டு நிறுத்தியதில் துருக்கியின் பங்கு மகத்தானது.
1914 இல் உதுமானிய அரசின் ஹிஜாஸ் ரயில்வே திட்டத்திற்கு அதிகமான நிதியுதவி அளித்தது இந்திய முஸ்லிம்கள் என்பது வரலாற்றில் பதிவாகியுள்ளது. அதில் நிச்சயம் தமிழக முஸ்லிம்களின் பங்களிப்பு அதிகமாக இருந்திருக்கும் ஆனால் ஆவணம் இல்லை.
வரலாறு முக்கியம் மக்கா.
அதைவிட முக்கியம் வரலாற்றை ஆவணப்படுத்துவது மக்கா.