தொழில்முனைவோர் 2.0
தொழில்முனைவோர் 2.0
———————————————
அகில இந்திய சிறுபான்மை முஸ்லிம் பணியாளர் நலச் சங்கம் (AIMMEWA) மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ” தொழில்முனைவோர் 2.0 ” என்ற ஒரு நாள் பயிலரங்கம் மிகச்சிறப்பாக நெய்வேலி டவுன்ஷிப்பில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (25.02.2024) அன்று நடைபெற்றது.
இதில் ” வளர்ந்து வரும் தொழில் வாய்ப்புகள் ” என்ற தலைப்பில் வகுப்பெடுத்தேன்.
ஆரம்பமாக, தமிழக அரசின் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார கனவில் முஸ்லிம்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்றும் அதனால் முஸ்லிம் சமூகத்தில் ஏற்படும் மகத்தான மாற்றம் குறித்தும் வகுப்பெடுக்கப்பட்டது.
இரண்டாவதாக, நிகழ்ச்சியின் மையக்கருவான பல்வேறு துறைகளில் வளர்ந்து வரும் தொழில் வாய்ப்புகள் குறித்தும் அதை சந்தைப்படுத்தும் யுக்தி குறித்தும் விரிவாக வகுப்பெடுக்கப்பட்டது.
இறுதியாக, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் நிதி மற்றும் மானியங்கள் குறித்தும், புத்தாக்க (Startup) தொழில்களுக்கு அரசு வழங்கும் பல சிறப்பு சலுகைகள் குறித்தும் உதாரணங்களுடன் வகுப்பெடுக்கப்பட்டது.
நெருக்கடிகள் சூழ்ந்த இன்றைய உலகில், அறிவாற்றலும் பொருளாற்றலும் ஒரு சமூகத்தின் ஆளுமை தன்மைக்கும் நிலையான பாதுகாப்புக்கும் உத்திரவாதமளிக்கின்ற பேராயுதங்கள்.
இதுபோன்று ஆற்றலை கொண்டு உம்மத்தை மேம்படுத்துவது தான் இந்த நிகழ்ச்சியின் நோக்கமாக இருக்கிறது.
– பேரா. அ.இஜாஸ் முஸம்மில் M.Com., (PhD – MSME).,
தொழில் பயிற்சியாளர்,
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் .
+91 9629167027