6ஆம் ஆண்டு நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் உருவாக்கப்பட்டு வரும் பைத்துல் ஹிக்மாவில் அமைந்துள்ள ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியின் 6ஆம் ஆண்டு நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
7ஆண்டுகள் மரபுவழி மதரஸா கல்வி கற்கும் இந்த இளம் ஆலிம்கள் உயர்கல்வியில் சட்டம் ஆட்சிப்பணி இதழியல் ஆகிய அதிகாரமிக்க துறைகளை இலக்காக கொண்டு படித்து வருகின்றனர்.
இவ்விழாவில் ஜாமிஆவின் 7ஆம் ஆண்டு மாணவர்கள், நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) நடைபெற்ற தென்அமெரிக்க நாடுகளின் சுற்றுச்சூழல் தொடர்பான ஒரு வழக்கை மாதிரி நீதிமன்றம் (Moot Court) அமைத்து விவாதம் செய்தனர்.
வளரும் பிள்ளைகளுக்கு கூர்மையான இலக்கு நிர்ணயித்து பயிற்சி அளிக்கப்படும் போது வெறும் பட்டதாரிகளாக உருவாகாமல் சமூகத்துக்கும் நாட்டுக்கும் தேவயான சிறப்புத் திறனுடைய அறிஞர்கள் உருவாகிறார்கள்.
உயர்வான இலக்கை நோக்கி பிள்ளைகளை உருவாக்குவதில் நீண்டகால பொறுமையும் தளராத அர்ப்பணிப்பும் எவ்வாறு இருக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு வகுப்பெடுக்கப்பட்டது.