
கீரனூர் விஸ்டம் பள்ளியில் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி
அறிவு பொருள் நேரம் உள்ளிட்ட அமானிதங்களில் பெரும்பாலானவற்றை உம்மத்துக்காக அர்ப்பணித்து வாழ்ந்த அல்லது வாழும் ஒருசில மூஃமின்களால் அவர்கள் பிறந்த ஊர் உயர்ந்த மதிப்பீடுகளைப் பெற்று வரலாற்றில் இடம்பெறுகிறது.
அப்படிப்பட்ட ஒருசிலரின் உயர்ந்த வாழ்க்கை முறை காரணமாக அந்த ஊரும், ஊர் மக்கள் அனைவரும்,அவர்களது சந்ததியினரும்,மிகுந்த கண்ணியத்தைப் பெறுகின்றனர்.
தமிழகத்தில் பல முஸ்லிம் ஊர்களை அப்படி குறிப்பிட்டுச் சொல்லலாம்.அதில் ஒரு மகத்துவமான ஊர்தான் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கீரனூர்.
கீரனூரில் சமூகப் பொறுப்புள்ள பெருமக்களால் துவங்கப்பட்டுள்ள Wisdom Public School முதலாவது ஆண்டு விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன்.
நவீனகால முஸ்லிம் உம்மத்தின் கல்வித் தேவையை தெளிவாக தீர்க்கமாக அறிந்தவர்களால் துவங்கப்பட்டுள்ள தரமான CBSE பள்ளிக்கூடம். பழனி சுற்றுவட்டார மக்கள் அனைவரும் இந்த பள்ளிக்கூடத்தை மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
—————
கீரனூர் பள்ளிவாசலில் தொழுதுவிட்டு அந்த பள்ளியை கட்டுவதற்கு முன்னின்று உழைத்த அனைவருக்காகவும் துஆ செய்தேன். பள்ளியின் பாரம்பர்ய வடிவமைப்பு நமது முன்னோர்களது அறிவுக்கும் அர்ப்பணிப்புக்கும் ஒரு சான்று. பள்ளி குறித்து தனியாக பதிவிடுகிறேன்.