குடியரசு இந்தியாவின் துவக்க காலத்தில் வாழ்ந்த தமிழக முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய வரலாறுகள் பாடமாக பயிற்றுவிக்கப்பட்டிருந்தால் இந்நேரம் உம்மத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கும்.
குடியரசு இந்தியாவின் துவக்க காலத்தில் வாழ்ந்த தமிழக முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய வரலாறுகள் பாடமாக பயிற்றுவிக்கப்பட்டிருந்தால் இந்நேரம் உம்மத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கும்.
இந்த நாட்டின் வளர்ச்சியை வழிநடத்துவோரில் முஸ்லிம்களே முதல்நிலை வகித்திருப்பார்கள்.
மிக முக்கியமாக, மார்க்கத்தின் பிரிவு விடயங்களில் உண்டாகும் கருத்து வேறுபாடுகளை தூக்கிப் பிடித்துக் கொண்டு காலம் தள்ளுவோர் கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருப்பார்கள்.
ஒரு சமூகத்தின் வரலாறும் பகுத்தறிவுமிக்க மரபுகளும் தான் அந்த சமூகம் கரையேறுவதற்கு காரணியாக இருக்கும் கலங்கரை விளக்கு.
அல்லாஹ்வின் கருணையால் கடந்த சில ஆண்டுகளாக உம்மத்தில் முதிர்ச்சியான அணுகுமுறை அதிகரித்து வருகிறது. அறிவு செல்வம் அந்தஸ்த்து போன்ற அமானிதங்களை பெற்றவர்களிடம் இருந்த அகங்கார இறுக்கம் தளர்ந்து வருகிறது.
நாட்டின் சமீபகால சமூக அரசியல் நெருக்கடிகள் இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.
வணக்க வழிபாடுகளுடன், இஸ்லாமிய வரலாற்றுப் பின்புலத்தில் நவீனக் கல்வி ஆராய்ச்சி தொழில் செல்வம் பெருக்குதல் போன்றத் துறைகளில் கவனத்தை குவித்து தன்னையும் தனது குடும்பத்தையும் உம்மத்தையும் இந்த நாட்டையும் வறுமை ஏழ்மையிலிருந்து மீட்டு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் ஆக்கப்பூர்வமான பணிகளில் உம்மத்தின் மாணவர்கள் இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிற போது இந்த மாற்றங்களின் வேகம் அதிகரிக்கும்.
இதுவே ஒரு மூமின் மண்ணறையிலும் மறுமையிலும் வெற்றி பெற்று உயர்ந்த பரிசுகளை பெறுவதற்கான இஸ்லாமிய போட்டித்தேர்வுகள் (Islamic Competitive Exam).