
மீனவ குடும்பங்களின் கவனத்துக்கு
தமிழக கடற்கரை கிராமங்களில் பல முஸ்லிம் குடும்பங்கள் பன்னெடுங்காலமாக மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இவர்களின் சமூகப் பொருளாதார வாழ்வியல் நிலைகளில் பெரிய முன்னேற்றங்களுக்கு வழியில்லாமல் இருக்கிறது.
இந்த குடும்பங்கள் வாழும் சூழலையும் அவர்களின் பொருளாதார நிலைகளையும் கருதி சில சமூக ஒதுக்குதல் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றன.
இந்த மீனவ குடும்பங்களில் தற்போது பள்ளி கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் பிள்ளைகளின் உயர்கல்விக்கு மிகச்சரியான இலக்கு நிர்ணயித்து ஊக்கப்படுத்தினால் அடுத்த 15 ஆண்டுகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். ஏற்படுத்த வேண்டும்.
இந்த பிள்ளைகளின் மரபணுவில் கடல்சூழல் குறித்த பதிவுகள் உள்ளன. இவர்களின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் கடலியல் (Oceanography) கடல்சார் உயிரியல் (Marine Biology) வானிலையியல் (Meteorology) கடல் வள மேலாண்மை (Marine Resource Management)உள்ளிட்ட படிப்புகளில் ஆராய்ச்சிக் கல்வியை முன்னெடுக்க ஆர்வப்படுத்த வேண்டும்.
அரபுநாடுகளில் இத்தகைய ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு அரசுப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் ஏராளமாக நிதியுதவி செய்கின்றன.
பொருளாதார அதிகாரம் அடைவதற்கும் சமூக அடையாளங்கள் மாறுவதற்கும் உயர்கல்வியும் ஆராய்ச்சியும் தான் வித்து.
மீன்பிடித்தொழில் ஒரு பரக்கத்தான தொழில். அதேநேரம் கடல் ஆராய்ச்சிகள் என்பது அல்லாஹ்வுக்கு உகந்த ஒரு இபாதத்.
மீனவ குடும்பங்கள் மாற்றி சிந்திக்க வேண்டும்.