
முஸ்லிம்களின் கட்டுமானத் தொழில் (Construction Business) வளர்ச்சிக்கு இந்த அமைப்பு கட்டாயத் தேவை.
Civil, Architecture படித்தவர்கள், கட்டுமானத் தொழிலில் நீண்ட கால அனுபவங்களின் அடிப்படையில் பயணிப்பவர்கள், நாட்டில் ஏற்பட்டு வரும் மாற்றங்களையும் மக்களின் எதிர்பார்ப்புகளையும் துல்லியமாக அறிந்துகொள்ளும் முயற்சிகள் தான் இவர்களின் தொழில் வளர்ச்சிக்கான மூலாதாரம்.
காட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஒரு அமைப்பாக இயங்கினால் மட்டுமே இது சாத்தியப்படும்.
பல்வேறு பொது அமைப்புகளில் அங்கம் வகிக்கும் அதேநேரம் முஸ்லிம் கட்டுமான நிறுவனங்கள் பொறியாளர்கள் வடிவமைப்பாளர்கள் தங்களது சமூகத்தவர் மட்டுமே அங்கம் வகிக்கும் ஒரு அமைப்பை கட்டாயம் அமைத்துக் கொள்ள வேண்டும்.
பொது அமைப்புகள் கட்டுமானத் தொழிலை இலாபகரமாக செய்வதற்கும் உரிமை மீறல்களுக்கும் மட்டுமே ஆலோசனைகள் வழங்க முடியும்.
முஸ்லிம் கட்டுமான நிறுவனங்களின் அமைப்பினால் மட்டுமே தங்களது தொழிலை ஹலாலாகவும் பரக்கத்தாகவும் இலாபகரமாகவும் செய்வதற்கு பயிற்சியளிக்க முடியும்.
இலாபத்துக்கும் பரக்கத்துக்கும் எல்லையில்லா வேறுபாடுகளும் எக்கச்சக்கமான பலன்களும் உள்ளதை ஆன்மிகமாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
அதேபோல காலத்துக்கேற்ற தொழில்நுட்பங்களையும் நவீன கட்டுமானப் பொருட்களையும் கண்டறிவதற்கான முயற்சிகளுக்கு Civil, Architecture, Islamic Architecture, Soil Science, Building Information Modeling, Construction Management, 3D printing, Automation and Robotics , Green construction,போன்ற நவீன பிரிவுகளில் தகுதிவாய்ந்த மாணவர்களை தேர்வு செய்து அவர்களின் ஆராய்ச்சிக் கல்விக்கான செலவுகளை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த அமைப்பு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.
இதனால் கட்டுமானத் தொழிலில் உருவாகிவரும் புதிய வாய்ப்புகள் நவீன தொழில்நுட்பம் பசுமை காட்டுமானப் பொருட்கள் குறித்த தகவல்களும் தொழில் திட்டங்களும் இடைவெளி இல்லாமல் கிடைத்துக் கொண்டிருக்கும்.
முஸ்லிம் கட்டுமான நிறுவனங்கள் சர்வதேச அளவில் விரிவாக்கம் அடைந்திட இந்த R&D பிரிவு இன்றியமையாதது.
சமீபகாலமாக அறிவு வளமிக்க உம்மத்தின் பிள்ளைகள் Civil , Architecture, Structure , Environment போன்ற படிப்புகளில் ஆராய்ச்சிக் கல்வியை (PhD) முன்னெடுத்து வருகின்றனர் என்ற மறுமலர்ச்சியான செய்தியையும் இங்கே பதிவிட விரும்புகிறேன்.
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான பிரிவு (R&D -Research and development wing) எந்த நிறுவனத்தில் எந்த சமூகத்தில் வலிமையாக கட்டமைக்கப்படுகிறதோ அந்த நிறுவனமும் சமூகமும் எப்போதும் வளர்ச்சிப் பாதையிலேயே இருக்கும். அவர்கள் சார்ந்துள்ள துறையில் அவர்களே முன்னவர்களாகவும் தலைவர்களாகவும் இருப்பார்கள்.
– CMN SALEEM
