இஸ்லாமிய நாகரிகம் – சென்னை

” இஸ்லாமிய நாகரிகம் ” என்ற தலைப்பில் இரண்டுநாள் பயிலரங்கம் சென்னையில் நடைபெற்றது.

படித்த இளைஞர்களும் மதரசா மாணவர்களும் தங்களது முன்னோர்களின் வாழ்வையும் காலச்சார மரபுகளையும் அறிந்து அதன் நிழலில் தங்களுக்கான எதிர்கால இலக்கை நிர்ணயித்துக் கொள்ள ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

பள்ளிப்பருவத்தில் தங்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய இந்த வாழ்வியல் பாடம் இத்தனை ஆண்டுகளுக்குப்பிறகு இந்த இரண்டுநாள் பயிலரங்கத்தில் கிடைத்ததாக குறிப்பிட்டனர்.

முஸ்லிம் சமுதாயத்தில் இஸ்லாமிய வரலாறும் நாகரிக மரபுகளும் பயிற்றுவிக்கப்படுவது அதிகரித்தால் இளைஞர்கள் ஒருபோதும் வழிதவற மாட்டார்கள்.

வாழ்வில் எவ்வளவு உச்சநிலைக்கு சென்றாலும் தன் கலாச்சாரத்தையும் தன்மீதுள்ள சமூகப் பொறுப்புகளையும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

Read More

இஸ்லாமிய பள்ளிக்கூடம் துவங்குவதற்கான பயிலரங்கம்

தமிழக முஸ்லிம்களின் ஆரம்பக்கல்வி முதல் ஆய்வுக்கல்வி வரை இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட வேண்டும் என்ற ஒற்றை இலக்கில் இயங்கும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் கடந்த 11 ஆண்டுகளாக இஸ்லாமிய பள்ளிக்கூடம் துவங்குவதற்கான மூன்றுநாள் பயிலரங்கத்தை நடத்தி வருகிறது.

2024 – ஜனவரி 5,6,7 ஆகிய மூன்று நாட்கள் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் இந்த பயிலரங்கம் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பெண் கல்வியாளர்களை உருவாக்கும் தொலைநோக்கு இலக்குடன் இயங்கும் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் UG – ஆலிமா இறுதியாண்டு மாணவிகள் இந்த மூன்றுநாள் பயிலரங்கில் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றனர்.

கல்வித்துறையில் சாதனை படைக்கவும், ஒரு நர்சரி பிரைமரி பள்ளிக்கூடத்தை துவங்கவும் அதை திறனோடு நிர்வகிக்கவும் தேவையான அனைத்து பயிற்சிகளையும் இந்த மாணவிகள் பெற்றுள்ளனர்.

Read More

இஸ்லாமிய பள்ளிக்கூடம் துவங்குவதற்கான பயிலரங்கம்

தமிழக முஸ்லிம்களின் ஆரம்பக்கல்வி முதல் ஆய்வுக்கல்வி வரை இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட வேண்டும் என்ற தொலைநோக்கு இலக்கில் பணியாற்றி வரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் கடந்த 11 ஆண்டுகளாக இந்த மூன்றுநாள் பயிலரங்கத்தை நடத்தி வருகிறது.

இரண்டு கல்வியும் இணைக்கப்பட்ட ஒரு இஸ்லாமியப் பள்ளிக்கூடத்தை துவங்கி வெற்றிகரமாக நடத்திட தேவையான அனைத்து விதமான பயிற்சிகளையும் தலைசிறந்த வல்லுநர்கள் பயிற்சியளிக்கின்றனர்.

தமிழகத்தில் இதுவரை 44 இஸ்லாமியப் பள்ளிக்கூடங்கள் மற்றும் இரண்டு கல்வியும் இணைக்கப்பட்ட 3 அரபு மதரஸாக்கள் உருவாகிட இந்த பயிலரங்கம் பங்காற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

படித்த பெண்கள் தமிழகத்தின் தலைசிறந்த கல்வியாளர்களாக உருவாவதற்கான பயிற்சியையும் வழிகாட்டுதலையும் இந்த பயிலரங்கத்தில் பெறலாம்.

முன்பதிவு கட்டாயம்.

https://forms.gle/XuiL1EJziVgHZhCE7

Read More

தேசிய அரசமைப்புச் சட்ட நாள் (National Constitution Day) சிறப்பு நிகழ்ச்சி

7ஆண்டுகள் இஸ்லாமிய மார்க்க கல்வி பயின்ற ஆலிம்களை சட்டம் படித்த வழக்கறிஞர்களாக உருவாக்கும் முயற்சிகள் தொய்வில்லாமல் நடைபெற்று வருகின்றன.

புதுச்சேரி ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியில் தேசிய அரசமைப்புச் சட்ட நாள் (National Constitution Day) சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அரசமைப்புச் சட்டத்தின் மாண்புகள் குறித்து மாணவர்கள் நேர்த்தியாக உரையாற்றினர்.அதோடு மாதிரி நீதிமன்றம் (Moot Court) அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜாமிஅத்துல் ஹிக்மாவின் ஆசிரியர்களான வழக்கறிஞர் முஹம்மது இஸ்மாயில் M.A LLB., வழக்கறிஞர் தவுஃபீக் புஹாரி BBA.LLB.., ஆகிய இருவர் முன்னிலையில் முக்கியமான ஒரு வழக்கு குறித்து மாணவர்கள் விவாத பயிற்சியை மேற்கொண்டனர்.

சமூகத்தின் சிக்கல்களை புலம்பிக் கொண்டிருப்பதை விட சிறுக சிறுக தீர்வை நோக்கி நகரும் திட்டங்களும் தொய்வில்லாத உழைப்பும் தான் இன்றைய தேவையாகவும் உம்மத்தின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

Read More

மாநில அளவில் அரபிக் கல்லூரி மாணவர்களுக்கான திறனாய்வு போட்டி

உலக அரபி தினத்தை (World Arabic Day) முன்னிட்டு திருச்சி அஸ்ஸலாம் அரபிக் கல்லூரியில் மாநில அளவில் அரபிக் கல்லூரி மாணவர்களுக்கான திறனாய்வு போட்டிகள் நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் புதுச்சேரி பைத்துல் ஹிக்மாவில் இயங்கிவரும் ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக்கல்லூரி மாணவர்கள் அரபி பேச்சுப் போட்டியிலும் அரபி கலந்துரையாடல் போட்டியிலும் பங்குபெற்று இரண்டாம் பரிசை பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

இந்த மாணவர்கள் 7 ஆண்டுகள் மதரஸா பாடத்துடன் மத்திய அரசின் NIOS வாரியத்தின் ஆங்கில வழியில் பள்ளி இறுதித் தேர்வுகளை எழுதும் கல்விமுறையில் படித்து வருபவர்கள்.

மேலும் இவர்கள் தங்களது உயர்கல்வியில் சட்டம் (Law) ஆட்சிப்பணி (Civil Service) பொதுக்கொள்கை (Public Policy) இதழியல் (Journalism) ஆகிய துறைகளை இலக்காக கொண்டு படித்து வருபவர்கள்.

Read More

கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்

அடுத்த கால் நூற்றாண்டு காலத்திற்கு தமிழக முஸ்லிம் வீடுகளிலும், சமூகத்தின் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகள் அனைத்திலும் “ஆராய்ச்சிக் கல்வி – ஆராய்ச்சிக் கல்வி ” என்று முழங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

ஆராய்ச்சிக்கல்வி தான் உம்மத்தின் கல்விசார் இலக்கு.

பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் என்று யாரை சந்தித்தாலும் ஆராய்ச்சிக் கல்வியை முன்னெடுங்கள் என்று கூறுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதன்பலனாக நமது கணக்கில் நன்மைகள் வரவு வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.சிலகாலங்களில் அறிவியல் துறையில் இளம் ஆராய்ச்சியாளர்கள் துளிர்விட்டு முளைப்பதை காணும் வாயப்பும் நமக்கு கிடைக்கும்.

மண்ணில் விழுகின்ற விதைகள் எல்லாம் முளைத்து விடுவதில்லை. எந்த விதை முளைக்க வேண்டும் என்பது இறைவனுடைய விருப்பம் சார்ந்தது. ஆனால் தளர்ந்து விடாமல் விதைத்துக் கொண்டே இருப்பது ஒன்றே நமது கடமை.

சென்னை புதுப்பேட்டை மக்கள் கூட்டமைப்பு சார்பில் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மெளலவி ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்களும் நானும் கலந்து கொண்டோம்.

Read More

12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் மற்றும் IYF, கோவை மாவட்டம் இணைந்து கிரசென்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 10,11, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி 25/11/2023 அன்று பள்ளி வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது…..

அடுத்த 20 ஆண்டுகளில் மாணவ/மாணவிகள் ஆய்வுக் கல்வியை நோக்கி பயணிக்க வேண்டியதன் அவசியம் குறித்து வகுப்பு எடுக்கப்பட்டது…..

அல்ஹம்துலில்லாஹ்…..

Read More

மெளலானா அபுல்கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாள் – தேசிய கல்வி தினம்

புதுச்சேரி பைத்துல் ஹிக்மாவில் இயங்கிவரும் ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியில் மெளலானா அபுல்கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாள் – தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மெளலானா ஆசாத் அவர்களின் வாழ்வு சிந்தனைகள் விடுதலைப் போராட்டம் மற்றும் குடியரசு இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக அவர்களது கல்விப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களில் ஜாமிஆவின் மாணவர்கள் உரைநிகழ்த்தினர்.

Read More

லால்பேட்டையில் – “முஸ்லிம் விஞ்ஞானி -2040”

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் மற்றும் முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச் சங்கம், இமாம் காஜ்ஜாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பாக “முஸ்லிம் விஞ்ஞானி -2040” நிகழ்ச்சி 07.11.2023 அன்று நடைபெற்றது.

நிகழ்வின் துவக்கமாக தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் உயர்கல்வி ஆலோசகர் பேரா.M.முஹம்மது இஸ்மாயில் M.E,M.A .,LLB., அவர்கள் ஆய்வுக் கல்வியின் அவசியம் குறித்தும் , அடுத்த 20 ஆண்டுகளில் முஸ்லிம் சமூகத்தில் ஆய்வாளர்களும் விஞ்ஞானிகளும் உருவாக வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும், இஸ்லாமிய வரலாற்றில் வாழ்ந்த அறிவுஜீவிகள் குறித்தும்

உயிரியல் துறையில் (Life Science ) ஆய்வுக் கல்விக்கான சர்வதேச வாய்ப்புகள் குறித்தும் விரிவாக விளக்கினார்கள்.

அதைத் தொடர்ந்து தொழில் நுட்பத் துறையில் (Technology) அடுத்த 20 ஆண்டுகளில் ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்தும் அதில் நாம் பங்கெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் அறிவியல் தொழில்நுட்பத் துறை ஆராய்ச்சியாளர் சகோ.R.முஹம்மது அனஸ் B.E.,B.Sc .,அவர்கள் விரிவாக விளக்கினார்கள்.

இறுதியில் ஆய்வுக் கல்வி குறித்த மாணவ மாணவிகளின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது.

இந்த மாணவர்கள் கல்லூரியில் சேர்வது முதல் ஆராய்ச்சியாளர் ஆகும் வரை அவர்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சியளித்து வழிகாட்டும் பொறுப்பை தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் ஏற்றுள்ளது.

நிகழ்விற்கான ஏற்பாடுகளை

லால்பேட்டை முஸ்லிம் கல்வி சங்க நிர்வாகிகள் மிகச் சிறப்பாக செய்திருந்தினர்.

Read More

மேனிலை மாணவர்களுக்கான இலக்கு நிர்ணயிக்கும் சிறப்பு வகுப்பு

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளியின் உயர்நிலை மேனிலை மாணவர்களுக்கான இலக்கு நிர்ணயிக்கும் சிறப்பு வகுப்பு நடைபெற்றது.

இமாம் ஷாஃபி பள்ளி நிர்வாகமும் வழக்கறிஞர் முகம்மது தம்பி அவர்களும் இந்நிகழ்வை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

ஏதாவது ஒரு பட்டம் பெற்று அரபுநாடுகளுக்கு வேலைதேடி ஓடும் நிலையை மாற்றி தொலைநோக்காக சிந்திக்க வேண்டிய கட்டாயம் இருப்பதை காட்சிப்பட தரவுகளுடன் பகிர்ந்து கொண்டோம்.

அரபுநாடுகளின் கார்ப்பரேட் கம்பெனி வேலையை விட அங்கேயுள்ள அரசு பல்கலைக்கழகங்களில் உயிரியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்களுக்கு மிகுந்த கண்ணியமும் அதிகப்படியான உதவித்தொகையும் எக்சக்கமான சலுகைகளும் வழங்கப்படுவதை நுட்பமாக கவனப்படுத்தினோம்.

மக்கள் தொகை குறைந்து போன ஐரோப்பிய நாடுகளில் ஆராய்ச்சிக் கல்வியை முன்னெடுப்பவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுவதையும் மாணவர்களுக்கு கவனப்படுத்தினோம்.

அதிரையின் இளம் தலைமுறை உயிரியல் வேதியியல் ஆராய்ச்சியாளர்களாக, புதிய தொழில்நுட்பங்களின் கண்டுபிடிப்பாளர்களாக, உற்பத்தித் தொழில் முனைவோராக,சர்வதேச வழக்கறிஞர்களாக உருவாகும் வழிமுறையை மாணவர்களின் உள்ளத்தில் விதைத்தோம்.

காலையில் மாணவர்களை ஊக்கப்படுத்தியது மதியம் பள்ளியின் ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தது மாலையில் பெற்றோர்களுக்கு பொறுப்புகளை நினைவுபடுத்தியது என்று நாள் முழுவதும் மூன்று அத்யாவசியமான நிகழ்வுகளில் உரைநிகழ்த்தியுள்ளேன்.

Read More