இளநிலை (UG) பட்டப்படிப்பு முடித்துள்ள மாணவர்களுக்கான இரண்டு நாள் பயிலரங்கம்

இளைய தலைமுறையினருக்கு “அடுத்து என்ன செய்ய வேண்டும்” என்ற வழிகாட்டுதலை மிகச்சரியான காலத்தில் வழங்குவதில் தான் ஒரு சமூகத்தின் வளர்ச்சியும் எழுச்சியும் உள்ளடங்கியிருக்கிறது.

வழிகாட்டுதல்கள் இடைவெளி இல்லாமல் வழங்கப்பட்டு அதை உறுதியாக பின்பற்றப்படும் சமூகத்தில் மட்டுமே வளர்ச்சியும் சமூக மாற்றமும் விரைவானதாகவும் நிலையானதாகவும் இருக்கும்.

இளநிலை (UG) பட்டப்படிப்பு முடித்துள்ள மாணவர்களுக்கான இரண்டு நாள் பயிலரங்கத்தை தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் வருகின்ற ஜுலை 8 & 9, 2023 அன்று புதுச்சேரி பைத்துல் ஹிக்மா வளாகத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

மேற்படிப்பு, ஆராய்ச்சி, கல்வி உதவி,தொழில், இயற்கை வாழ்வியல், குடும்ப உறவுகள், சமூக உறவுகள், வரலாறு, ‌‌அரசியல் என சகலத்தையும் கவனப்படுத்தி இளைஞர்களின் ஆளுமைத் தன்மையை அதிகரிக்கும் பயிலரங்கம் இது.

உங்கள் வீட்டில் மஹல்லாவில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களை மட்டும் இந்த பயிலரங்கத்தில் கலந்து கொள்ளச் செய்யுங்கள்.

Read More

கோவையில் – முஸ்லிம் விஞ்ஞானி

இன்ஷா அல்லாஹ் வரும் சனிக்கிழமை (10.06.2023) அன்று கோவையில்…

முஸ்லிம் விஞ்ஞானி – 2040 நிகழ்ச்சி

Read More

மாநிலம் தழுவிய உயர்கல்வி மாநாடு – 2023

அப்பாஸிய கலீஃபா ஹாருன் அல் ரஷீத் அவர்களால் 9 ஆம் நூற்றாண்டில் துவங்கப்பட்ட உலகப்புகழ் பெற்ற ” பைத்துல் ஹிக்மா ” என்ற உயர்கல்வி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் வரலாற்றுச் சாதனைகளை திருச்சியில் நடைபெற்ற உயர்கல்வி மாநாட்டில் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி மாணவிகள் நாடகம் மூலம் காட்சிப் படுத்தினர்.

இஸ்லாமிய வரலாற்றில் கற்றறிந்த அறிஞர் (ஆலிம்) என்றால் அது மார்க்க கல்வியின் நிழலில் உலகின் அனைத்து பயனுள்ள அறிவையும் பெற்ற பல்துறை விற்பன்னர் என்பது தான் அடையாளமாக இருந்துள்ளது என்பதை வரலாறு நமக்கு சான்றளிக்கிறது.

வரலாற்றின் மத்தியகாலத்தில் உலகின் அறிவுத்துறைக்கும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் முஸ்லிம்கள் ஆற்றியுள்ள பங்களிப்புகளை கவனத்தில் கொள்ளாமல் இன்றைய பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் உயர்கல்வியை தேர்வு செய்வது கூடாது.

அது ஈமானிய இலக்கு இல்லாத இன்றைய முதலாளித்துவத்தின் ஊழியர்களாக காகிதத்தில் பட்டங்களை சுமக்கும் வெறும் பட்டதாரிகளாக அந்த பிள்ளைகளை மாற்றிவிடும் பேராபத்து இருக்கிறது.

Read More

மாநிலம் தழுவிய உயர்கல்வி மாநாடு – 2023

” நீங்களும் உங்களது குடும்பமும் உங்கள் சந்ததிகளும் ஆன்மிகத்துடன் அறிவாற்றல் பெற வேண்டும், அதன் மூலம் இந்த உம்மத்துக்கு பாதுகாப்பும் கண்ணியமும் அதிகரிக்க வேண்டும். இதற்கான எல்லா உதவிகளையும் வழிகாட்டுதலையும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் எப்போதும் செய்யும் ” இந்த நம்பிக்கையை மாணவ மாணவிகள் பெற்றோர்களுக்கு விதைப்பது தான் இந்த உயர்கல்வி மாநாட்டின் நோக்கமாக இருந்தது.

மாணவ மாணவிகள் தனித்தனியாக விளக்கம் பெறுவதற்கு வசதியாக ஆலோசனை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. எந்த துறை குறித்தும் கேட்டு தெளிவு பெறும் வகையில் வல்லுநர்கள் குழு அந்த அரங்கில் அமர்ந்து ஆலோசனை வழங்கினர்.

சட்டம் / ஆட்சிப்பணி / ஆயுஷ் மருத்துவம் / உயிரியல் / ஆகிய துறைகளில் ஆராய்ச்சிக் கல்வியை (Ph.D) முன்னெடுக்கும் ஆதரவற்ற (எத்தீம்) ஏழை மாணவ மாணவிகளுக்கு அவர்களின் கல்வி காலம் முழுமைக்கும் பொறுப்பேற்கும் அரங்கும் அமைக்கப்பட்டிருந்தது.

Read More

மாநிலம் தழுவிய உயர்கல்வி மாநாடு – 2023

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் மாநிலம் தழுவிய உயர்கல்வி மாநாடு திருச்சியில் நடைபெற்றது.

பல ஜூம்ஆ மேடைகளில் இது குறித்த அறிவிப்பு செய்யப்பட்டு, பல ஜமாஅத் நிர்வாகம் தங்களது மஹல்லா பிள்ளைகளை மாநாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் துறைசார்ந்த உயர்கல்வி நெறியாளர்கள் மிகச்சிறப்பாக பயிற்சியளித்தனர். (அனைவரும் முனைவர் பட்ட (Ph.D)ஆய்வாளர்கள்)

இனி வரும் காலங்களில் முஸ்லிம் பிள்ளைகள் யாராக உருவாக வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கேற்ற உயர்கல்வி படிப்புகள் எது எங்கு படிக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

முஸ்லிம் சமூகத்தில் மகத்தான சிந்தனை மாற்றத்திற்கான துவக்கமாக இந்த உயர்கல்வி மாநாடு அமைந்திருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.

Read More

திருநெல்வேலியில் – முஸ்லிம் விஞ்ஞானி

இன்ஷா அல்லாஹ்…..

திருநெல்வேலியில் நாளை நடைபெறுகிறது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் கட்டாயம் கலந்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்வுக்கும் இந்த உம்மத்தின் வாழ்வுக்கும் வளம் சேர்க்கும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி.

Read More

வெற்றிப்பாதை

நமது பிள்ளைகள் கட்டணம் இல்லாமல் படிப்பதற்கு தமிழகத்தில் வாழ்ந்து மறைந்துள்ள நமது மூத்த தலைமுறை தனது சொந்த சொத்துக்களை வக்ஃபு செய்தும் அரும்பாடுபட்டு நிதி திரட்டியும் சுமார் 11 கலை அறிவியல் அரசு உதவிபெறும் கல்லூரிளை தமிழகம் முழுவதும் உருவாக்கித் தந்துள்ளனர்.

பட்டப்படிப்பு துவங்கி ஆராய்ச்சிக் கல்வி வரை கட்டணம் இல்லாமல் படிப்பதற்கு இதுபோன்ற ஒரு வாய்ப்பு வேறு எந்த சமூகத்துக்கும் இல்லை.

இந்த மாநாட்டின் செய்திகளும்,உயர்கல்வி குறித்த தனித்துவமான வழிகாட்டுதல்களும், குறிப்பிட்ட சில படிப்புகளுக்கு தகுதிபெறும் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான செலவினங்களை பொறுப்பெடுத்துக் கொள்ளும் கல்வி இயக்கத்தின் திட்டமும், முஸ்லிம் விளிம்புநிலை மக்களின் வாழ்வில் வசந்தங்களை நிச்சயம் கொண்டுவரும்.

உங்கள் மஹல்லாவில் வாழும் ஏழை எளிய மாணவ மாணவிகளை அவர்களது பெற்றோருடன் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளச் செய்யுங்கள்.

Read More

12 ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிலரங்கம்

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் 12 ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிலரங்கம் ஏப்ரல் 29 – மே 14 வரை (15 நாட்கள்) புதுச்சேரி பைத்துல் ஹிக்மா வளாகத்தில் நடைபெற உள்ளது.

அதேபோல 8 ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரையிலான பெண் பிள்ளைகளுக்கான பண்பியல் பயிற்சி முகாம் மே 2முதல் 15 வரை (15 நாட்கள்) அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது.

மகத்தான வளர்ச்சியை நோக்கி முஸ்லிம் பிள்ளைகளை ஆன்மிக ரீதியாக ஆற்றல்படுத்தும் பயிலரங்கம் இது.

உயர்கல்வி மற்றும் வாழ்வியல் ரீதியாக கூர்மையான இலக்குடன் இதன் பாடங்களும் பயிற்சி முறைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

உங்கள் பிள்ளைகளின் நலனுக்காக முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஆண் பெண் பிள்ளைகளுக்கான கல்விப் பாதையை தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளுங்கள்.

அது உங்கள் குடும்பத்தின் முன்னேற்றத்துக்கும் முஸ்லிம் உம்மத்தின் கண்ணியத்துக்கும் நிச்சயம் வலு சேர்க்கும்.

Read More

முஸ்லிம் விஞ்ஞானி- 2040, பல்லாவரம் , சென்னை

அல்ஹம்துலில்லாஹ்… பல்லாவரம் வட்டார மஹல்லா ஜமாத் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் இணைந்து நடத்திய ” முஸ்லிம் விஞ்ஞானி -2040″ நிகழ்ச்சி பல்லாவரம் ஜமால் பேலஸ் அரங்கில் நேற்று (04.10.22) நடைபெற்றது.

பல்லாவரம் தாருல் ஹுப்பால் ஹுசைனிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலவி ஆதம் ஸபியுல்லாஹ் இல்ஹாமி அவர்களின் வரவேற்புரையுடன் துவங்கிய இந்நிகழ்வில்,

துவக்கமாக தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் உயர்கல்வி ஆலோசகர் பேரா.M.முஹம்மது இஸ்மாயில் M.E.,LLB., அவர்கள் ஆய்வுக் கல்வியின் அவசியம் குறித்தும் , அடுத்த 20 ஆண்டுகளில் முஸ்லிம் சமூகத்தில் ஆய்வாளர்களும் விஞ்ஞானிகளும் உருவாக வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து விரிவாக விளக்கினார்கள்.

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் உயிரியல் பிரிவு ஆலோசகர் பேரா.அப்துல் பாசித் M.Sc (Ph.D) அவர்கள் உயிரியல் துறையில் (Life Science ) ஆய்வுக் கல்விக்கான வாய்ப்புகள் குறித்து PowerPoint மூலம் வகுப்பெடுத்தார்கள்.

இறுதியாக தொழில் நுட்பத் துறையில் (Technology) அடுத்த 20 ஆண்டுகளில் ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்தும் அதில் நாம் பங்கெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் அறிவியல் தொழில்நுட்பத் துறை ஆராய்ச்சியாளர் சகோ.R.முஹம்மது அனஸ் B.E.,B.Sc .,அவர்கள் விரிவாக விளக்கினார்கள்.

நிகழ்வின் இறுதியில் ஆய்வுக் கல்வி குறித்த மாணவ மாணவிகளின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது.

நிகழ்விற்கான ஏற்பாடுகளை பல்லாவரம் வட்டார மஹல்லா ஜமாத் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மிகச் சிறப்பாக செய்திருந்தினர்.

Read More

கல்விச் சிந்தனையாளர்களை உருவாக்கும் இரண்டு நாள் பயிலரங்கம்

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் கல்விச் சிந்தனையாளர்களை உருவாக்கும் இரண்டுநாள் பயிலரங்கம் பைத்துல் ஹிக்மாவில் நடைபெற்றது.

முஸ்லிம் உம்மத்துக்கு 6 துறைகளில் பயிற்சியளிக்கும் சிறப்பு பயிற்சியாளர்களை (Trainers) உருவாக்குவதே இந்த பயிலரங்கின் நோக்கம்.

👉 இஸ்லாமிய கல்வி வரலாற்றுப் பயிற்சியாளர் (Islamic Educational History Trainer)

👉 உயர்கல்வி வழிகாட்டி (Career Counselor)

👉 அறிவியல் ஆலோசகர் (Scientific Counselor)

👉 தொழில் பயிற்சியாளர் (Business Coach)

👉 இயற்கை வாழ்வியல் பயிற்சியாளர் (Lifestyle Trainer)

👉 முனைப்படுத்தும் சொற்பொழிவாளர் (Motivational Speaker)

பட்டதாரிகள் இளம் ஆலிம்கள் ஆலிமாக்கள் என பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு மஹல்லாவிலும் பயற்சி வகுப்புகளை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இன்றைய முஸ்லிம் உம்மத்தின் வேருக்கு நீர்பாய்ச்சும் இந்த சமூகப் புனரமைப்பு பணிகளுக்கு சமூக அக்கரையும் விசால மனமும் கொண்ட அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுகிறோம்.

Read More