2024 – Page 3 – TMKI.org

Category: 2024

இஸ்லாமிய பள்ளிக்கூடம் துவங்குவதற்கான பயிலரங்கம்

தமிழக முஸ்லிம்களின் ஆரம்பக்கல்வி முதல் ஆய்வுக்கல்வி வரை இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட வேண்டும் என்ற தொலைநோக்கு இலக்கில் பணியாற்றி வரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் கடந்த 11 ஆண்டுகளாக இந்த மூன்றுநாள் பயிலரங்கத்தை நடத்தி வருகிறது.

இரண்டு கல்வியும் இணைக்கப்பட்ட ஒரு இஸ்லாமியப் பள்ளிக்கூடத்தை துவங்கி வெற்றிகரமாக நடத்திட தேவையான அனைத்து விதமான பயிற்சிகளையும் தலைசிறந்த வல்லுநர்கள் பயிற்சியளிக்கின்றனர்.

தமிழகத்தில் இதுவரை 44 இஸ்லாமியப் பள்ளிக்கூடங்கள் மற்றும் இரண்டு கல்வியும் இணைக்கப்பட்ட 3 அரபு மதரஸாக்கள் உருவாகிட இந்த பயிலரங்கம் பங்காற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

படித்த பெண்கள் தமிழகத்தின் தலைசிறந்த கல்வியாளர்களாக உருவாவதற்கான பயிற்சியையும் வழிகாட்டுதலையும் இந்த பயிலரங்கத்தில் பெறலாம்.

முன்பதிவு கட்டாயம்.

https://forms.gle/XuiL1EJziVgHZhCE7

Read More

இஸ்லாமிய பள்ளிக்கூடம் துவங்குவதற்கான பயிலரங்கம்

தமிழக முஸ்லிம்களின் ஆரம்பக்கல்வி முதல் ஆய்வுக்கல்வி வரை இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட வேண்டும் என்ற ஒற்றை இலக்கில் இயங்கும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் கடந்த 11 ஆண்டுகளாக இஸ்லாமிய பள்ளிக்கூடம் துவங்குவதற்கான மூன்றுநாள் பயிலரங்கத்தை நடத்தி வருகிறது.

2024 – ஜனவரி 5,6,7 ஆகிய மூன்று நாட்கள் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் இந்த பயிலரங்கம் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பெண் கல்வியாளர்களை உருவாக்கும் தொலைநோக்கு இலக்குடன் இயங்கும் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் UG – ஆலிமா இறுதியாண்டு மாணவிகள் இந்த மூன்றுநாள் பயிலரங்கில் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றனர்.

கல்வித்துறையில் சாதனை படைக்கவும், ஒரு நர்சரி பிரைமரி பள்ளிக்கூடத்தை துவங்கவும் அதை திறனோடு நிர்வகிக்கவும் தேவையான அனைத்து பயிற்சிகளையும் இந்த மாணவிகள் பெற்றுள்ளனர்.

Read More

மாநில அளவில் அரபிக் கல்லூரி மாணவர்களுக்கான திறனாய்வு போட்டி

உலக அரபி தினத்தை (World Arabic Day) முன்னிட்டு திருச்சி அஸ்ஸலாம் அரபிக் கல்லூரியில் மாநில அளவில் அரபிக் கல்லூரி மாணவர்களுக்கான திறனாய்வு போட்டிகள் நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் புதுச்சேரி பைத்துல் ஹிக்மாவில் இயங்கிவரும் ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக்கல்லூரி மாணவர்கள் அரபி பேச்சுப் போட்டியிலும் அரபி கலந்துரையாடல் போட்டியிலும் பங்குபெற்று இரண்டாம் பரிசை பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

இந்த மாணவர்கள் 7 ஆண்டுகள் மதரஸா பாடத்துடன் மத்திய அரசின் NIOS வாரியத்தின் ஆங்கில வழியில் பள்ளி இறுதித் தேர்வுகளை எழுதும் கல்விமுறையில் படித்து வருபவர்கள்.

மேலும் இவர்கள் தங்களது உயர்கல்வியில் சட்டம் (Law) ஆட்சிப்பணி (Civil Service) பொதுக்கொள்கை (Public Policy) இதழியல் (Journalism) ஆகிய துறைகளை இலக்காக கொண்டு படித்து வருபவர்கள்.

Read More