
நான் சொல்லுவதை உங்கள் வீட்டுப் பிள்ளைகளிடமும் ஊர் பிள்ளைகளிடமும் அப்படியே நடைமுறைப்படுத்துங்கள்




” நான் சொல்லுவதை உங்கள் வீட்டுப் பிள்ளைகளிடமும் ஊர் பிள்ளைகளிடமும் அப்படியே நடைமுறைப்படுத்துங்கள்.
இன்ஷா அல்லாஹ் அடுத்த 10 – 15 ஆண்டுகளில் குலசேகரப்பட்டினத்தில் அடுத்த ஆண்டு துவங்கப்பட உள்ள இஸ்ரோவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தின் இளம் விஞ்ஞானிகளாக உங்கள் பிள்ளைகள் அமர்ந்திருப்பார்கள்.
கணிதம்,வேதியியல்,இயற்பியல், விண்வெளி, நிலவியல்,ராக்கெட் தொழில்நுட்பம் செமிகண்டக்டர்….. இதுபோன்று அறிவியல் தொழில்நுட்பங்களில் உங்கள் பிள்ளைக்கு பிடித்தமான துறையில் ஆராய்ச்சிக் கல்வியை முன்னெடுக்கத் தூண்டுங்கள்.
இதெல்லாம் வெறுமனே பள்ளி கல்லூரி படிப்புகள் என்று நினைத்து விடாதீர்.
அறிவியல் ஆராய்ச்சி என்பது அல்லாஹ்வுக்கு பிடித்தமான இபாதத் {வழிபாடு}. படைப்புகளின் நுட்பத்தையும் அதனுள் பொதிந்துள்ள இரகசியத்தையும் அறிந்து கொள்ளும் மகத்துவமான இபாதத்.
ஐவேளை தொழுகைக்கு தூண்டுவது போன்று அல்லாஹ்வின் படைப்புகளில் ஆராய்ச்சி செய்வதற்கு உங்கள் ஆண் பெண் பிள்ளைகளைத் தூண்டுங்கள்.
வெகுவிரைவில் உயிர்களுக்கும் இந்த நாட்டுக்கும் மதிப்பு மிகுந்த செல்வங்களாக உங்கள் பிள்ளைகள் மாறிப்போவார்கள் “
————————————-
இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தின் பாரம்பரியமிக்க ஹஸனியா நடுநிலைப்பள்ளியில் குலசை சங்கமம் 2.0 நிகழ்ச்சியின் இறுதியில் பரிசளிப்பும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.



