
வண்டலூர் புஹாரி ஆலிம் அரபிக் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடைபெற்றது.




ஆன்மிகப் பின்புலத்திலான அறிவாற்றலும் பொருளாற்றலும் தான் முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்புக்கும் கண்ணியத்துக்குமான அடித்தளங்கள்.
சமூக அக்கறையுடைய வள்ளலுடன் தொலைநோக்கு இலக்குடைய மார்க்க அறிஞரும் அர்ப்பணிப்பு உணர்வுடைய ஆசிரியர்களும் இணைந்ததின் வெளிப்பாடு தான் புஹாரி ஆலிம் அரபிக் கல்லூரி.
” கடந்த கால் நூற்றாண்டு காலமாக தமிழக முஸ்லிம் சமூகத்தில் மகத்தான அறிவுப் புரட்சியை உண்டாக்கி வரும் அரபிக் கல்லூரியின் பெருமைமிக்க மாணவர்கள் நீங்கள்.
ஆலிம் பட்டதாரிகள் என்ற அடையாளத்துடன் உருவாகி வரும் நீங்கள் அடுத்தடுத்த காலங்களில் தேர்வு செய்யும் மேற்படிப்பும் ஆராய்ச்சிக் கல்வியும் உங்களை அறிவிலும் பொருளிலும் வல்லமைமிக்கவர்களாக மாற்றிட வேண்டும். அதற்கேற்ற ஆராய்ச்சிக் கல்விப் பிரிவுகளை உங்களுக்கு கவனப்படுத்துகிறேன்….
உங்களைப் போன்ற இளைஞர்களின் உள்ளங்கள் பொழுது போக்கில் நேரத்தை வீணாக்குகிறது என்றால், சொகுசு வாழ்வை விரும்புகிறது என்றால், சிரமப்படாமல் செல்வம் பெருக வேண்டும் என்று ஏங்குகிறது என்றால், பெருமானார் {ஸல்} அவர்கள் எச்சரிக்கை செய்த மனித பலவீனங்களும் சோம்பேறித்தனமும் உள்ளே புகுந்துவிட்டது என்று பொருள்.
உங்களுக்காக,உங்களை சார்ந்துள்ள உங்கள் குடும்பத்துக்காக,உங்களின் வழிகாட்டுதலுக்கு ஏங்கி நிற்கும் முஸ்லிம் உம்மத்துக்காக, உங்களிடம் அமானிதமாக ஒப்படைக்கப்பட்டுள்ள அல்லாஹ்வுடைய தீனுக்காக,உங்களின் உயிரையும் உடமைகளையும் உரிமைகளையும் பாதுகாக்கும் இந்த நாட்டுக்காக நீங்கள் விழிப்புடன் துடிப்புடன் அயராத உழைப்புடன் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.
வறுமையின் விளிம்பில் நின்றாலும் படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பைத் தேடி ஓடிவிடாதீர்.
உங்களை முழுமையாக தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள் அறிவும் பொருளும் அதிகாரமும் உங்களை தேடி ஓடிவரும் “
-CMN SALEEM



