
அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி








அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் ” மகளிர் தொழில்முனைவு மற்றும் அதிகாரமளித்தல் ” {STATE LEVEL CONFERENCE ON WOMEN ENTREPRENEURSHIP AND EMPOWERMENT} என்றது தலைப்பில் மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
தொழில் செய்யும் ஆர்வமுள்ள மகளிருக்கு அனைத்து துறைகளிலும் அதிகரித்து வரும் வாய்ப்புகளை நிபுணத்துவம் மிக்க 4 வல்லுநர்கள் மிகத் துல்லியமாக கவனப்படுத்தினர்.
அரசு கலை அறிவியல் கல்லூரி – பேராவூரணி
வெங்கடேஸ்வரா கல்லூரி – பேராவூரணி
காதர் முஹைதீன் கல்லூரி – அதிராம்பட்டினம்
அரசு கலை அறிவியல் கல்லூரி – அறந்தாங்கி
உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளிலிருந்து இளநிலை முதுநிலை பயிலும் சுமார் 80 மாணவிகள் கலந்து கொண்டு ஆய்வறிக்கை சமர்ப்பித்தனர்.
பெண்களிடம் உழைப்பையும் பொருளீட்டலையும் வலியுறுத்தி அவர்களை அதிகாரப்படுத்தும் கருதரங்கமாக இது அமைந்திருந்தது.


