
ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரி





ஷரீஅத்தை முறைப்படி கற்ற ஆலிம்களை சட்ட வல்லுனர்களாகவும் இந்திய ஆட்சிப்பணிக்கும் இடைவெளியின்றி உருவாக்க வேண்டும் என்ற உயார்வான இலக்குடன் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் புதுச்சேரி மாநிலம் கடுவனூரில் கட்டமைத்து வரும் பைத்துல் ஹிக்மா கல்வி வளாகத்தின் முதல் நிறுவனமான ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா பிப்.1 அன்று நடைபெற்றது.
தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமாவின் ஆளுமை மிக்கத் தலைவர் மௌலானா P.A.காஜா மொயீனுத்தீன் பாக்கவி அவர்களும் மேனாள் மாவட்ட நீதிபதி அ.முஹம்மது ஜியாவுதீன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அல்லாஹ்வின் கருணையால்….தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் தொடர்ச்சியாக முன்வைத்து வரும் உயர்கல்வி இலக்கின் அடையாளங்கள் உருவாகி வரத் துவங்கிவிட்டது.
அல்ஹம்துலில்லாஹ்….
ஆலிம் + அட்வகேட் / ஆலிம் + IAS உள்ளிட்ட அதிகாரமிக்க இலக்கை நோக்கி தங்களின் உயர்கல்விப் பயணத்தை தொடரும் இந்த இளம் உலமாக்களுக்காக துஆ செய்யுங்கள்.



